பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய இலட்சியப் பற்றுள்ளவரின் செயலாகுமா இது எனில், ஆகாது. நெப்போலியன் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டுவிட்டான் என்றுதான் கூற வேண்டும்.. கூறுவர் கூறினர். ஆனால் நெப்போலியனின் மனம் வேறு விதமாகப் பக்குவம் அடைத்ததின் விளைவுதான் இந்த நிலைமை மாற்றமேயன்றி, கேவலப் போக்கு அல்ல என்ப தனை மிகக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே உணர முடியும்! பிரான்சு, கொடுங்கோலரின் கொலு மண்டபம் அல்ல; புரட்சிப் பூங்காவாகிவிட்டது; எனவே, கார்சிகா, தன் னைப் பிரான்சு அடிமைப் படுத்திவிட்டதாக இனி எண்ணத் தேவையில்லை; புதிய கருத்துக்கள் பரவிட, புதிய ஆட்சி முறை மலர்ந்திட, பிரான்சு வழிகாட்டுகிறது என்று கொள்ள வேண்டும்; இனிப் பிரான்சு நாட்டுடைய வலிவு எந்த அளவு வளருகிறதோ அந்த அளவுக்குப் புரட்சியில் பூத்த புதுமைக் கருத்துக்களுக்கு வெற்றி கிட்டும். எனவே இனி நாம் பிரான் சின் பக்கம் நிற்கவேண்டும் என்று முடிவு செய்தான்- எதனை யும் ஆய்ந்தறிந்து கணக்குப் போட்டுப் பார்க்கும் திறமை படைத்த நெப்போலியன். 184 பாயோலியின் கோட்டையை இருமுறை தாக்கியும் பலன் ஏற்படவில்லை--- அந்தத் தளபதியின் கை ஓங்கிவிடு கிறது-- நெப்போலியன் நாட்டுத் துரோகி என்று அறிவிக்கப் பட்டு விடுகிறது. நெப்போலியன் தப்பினால் போதும் என்ற நிலை! குடும்பத்துடன், கார்சிகாவை விட்டு வெளி ஏறி விடுகிறான். அப்போதே சிக்கியிருந்தால், நெப்போலிய னுடைய எதிர்காலம் இருண்டுபோய் விட்டிருக்கும். மார்சேல்ஸ் நகரில், ஒரு வீட்டின் நாலாவது மாடியில் தஞ்சமடைந்த இந்தக் குடும்பம் வாடுகிறது. இந்தச் சமயத்தில்தான் நெப்போலியனுடைய அண் ணன் ஜோசப், வணிகர் மகளை மணமுடித்ததும், நெப்போலி யன் டிசயரியைக் காதலித்துக் கைகூடாமற்போனதும். இதிலிருந்து, நெப்போலியன் கார்சிகன் என்ற நினைப்பை மாற்றிக் கொண்டு விடுகிறான்; நிலைமை மாறி விடுகிறது; பிரான்சுக்காரனாகி விடுகிறான்; பிரான்சு என் நாடு என்று கொள்கிறான்.