பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் படி அஞ்சாது போரிட்டு வெற்றிபெற்ற படையினர் போதும், அவன் புகழ் பாட. புதிய விண்மீன் ஒளிவிடத் தொடங்கி விட்டது என்பதனைப் பலரும் உணர்ந்தனர். வாய்ப்பு அளிக் கப்பட்டால், வாகை சூடிடலாம் என்ற நம்பிக்கை பலப்பட்டது நெப்போலியனுக்கு. 129 ஆனால், அவனுக்கான முன்னேற்றப் பாதை, பள்ளம் படுகுழியற்றதாக அமைந்துவிடவில்லை. அவ்வளவு எளி தாகவும் ஒரு புதியவனுக்கு இடம் அளித்துவிடப் பலருக்கு மனம் ஒப்பவில்லை. அரசு நடாத்துவோர் போர்க் கருவி பெறும் காரியமாக நெப்போலியனை, ஜெனோவா நகர் அனுப்பி வைத்தனர். அங்கு இருக்கும்போது, யாரோ மூட்டிவிட்ட கலகத்தால், அரசினர் நெப்போலியன்மீது ஐயம் கொண்டனர்— ஏதோ சதி நடத்துகிறான் என்று கூறி சிறைப்படுத்தினர். 'வெற்றி! வெற்றி!' என்று முழக்கமிட்டான் இளைஞன் -பாபம் சிக்கிக் கொண்டான் வசமாக-காலமெல்லாம் சிறையோ அல்லது சுட்டுத் தள்ளிவிடுவார்களோ, என்ன கதியோ இவனுக்கு என்று ஏளனமாகச் சிலரும், இரக்கம் காட்டிப் பலரும் பேசினர். நெப்போலியன் மனம் வெகு பாடுபட்டிருக்க வேண்டும். தூய்மை பற்றி ஐயப்பாடு கிளப்பப்படும்போது, உள்ளம் வெதும்பத்தானே செய்யும். அவ்விதமான மன வேதனையின் போதெல்லாம், நெப்போலியன் வாழ்க்கையையே வெறுத் துப் பேசுவதும், தற்கொலை பற்றி எண்ணுவதும் வாடிக்கை. என்ன வேலை இருக்கிறது இந்த உலகில். எப்படியும் சாகப் போகிறேன் ஓர்நாள்-என்னை நானே கொன்று கொள் வது சாலச்சிறந்ததல்லவா!அறுபது ஆண்டு முதியவனாகிவிட் டிருப்பின்,பரவாயில்லை; இவ்வளவு காலம் இருந்ததுபோல் இன்னும் சிறிது காலம் இருந்துவிடலாம் என்றுகூட எண் ணிக் கொள்ளலாம். நான் முதியவனல்ல; தொல்லைகள், மனச்சங்கடங்கள் அடுக்கடுக்காக, எனக்கு. மகிழ்ச்சி திருப்தி பூ-162-இ-5