பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 இருபது ஆண்டுகள் நெடுங்காலம் அடைபட்டுக் கிடக்கும் பொன், என் றேனும் ஓர்நாள் வெளியே வந்திடுவது காண்கிறோம்- அதுபோலவே, மங்கிக் கிடக்கும் ஆற்றல், வெளிவர வாய்ப் புக் கிடைத்தது. அரசாளும் குழுவினருக்கும் பாரிஸ் நகர மக்களுக்கும் பகை! குழுவினருக்குப் பாதுகாப்பு அளித்திடும் பொறுப்பு, நெப்போலியனிடம் ஒப்படைக்கப்பட்டது. விருதுகள் வேற்று நாட்டவரை வீழ்த்துவதிலேயே கிடைக்கும்-இது உள்நாட்டிலேயே ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளும் வேலை. இதுதானா, எனக்கு? மலை முகடு தாவி மாற்றானை வீழ்த்த வல்ல என்னை, காவல் காத்திடச் செய்கின்றனர் கலாம் விளைவிக்கும்கும்:பலை அடக்கச் சொல்லி, நாடாளும்பொறுப் பாளர் கூறுகின்றனர். நன்று! நன்று! நாடாளும் பொறுப் பாளர்களின் வீரம்!-என்று எண்ணி, உள்ளூற சிரிக்கிறான்; உலகாளும் ஆற்றலை உள்ளத்தில் அடக்கி வைத்துக் கொண் டுள்ள வீரன்'. பீதி கொண்ட ஆளும் குழுவினரிடம், ஆர்ப்பரித்து எழுந்து,அமளி மூட்டிடும், கும்பல் மோதிக் கொள்ள வந்த போது, நெப்போலியன், கலகக்காரர்கள்தானே, கைஒலி கேட்டாலே சிதறி ஓடுவர் என்று இருந்துவிடவில்லை— கடு மையாகத் தாக்கினான்— பலரைச் சுட்டு வீழ்த்தினால்! துணிவு! அரிதமான நடவடிக்கை!! லூயி மன்னன், புரட்சிக்காரர்களால் பிடித்திழுத்துச் செல்லப்பட்ட நாட்களிலேயே, நெப்போலியன், நண்பர் சிலரிடம் மெல்லிய குரலில் கூறியிருக்கிறான். கண்டதைக் கையில் எடுத்துக் கொண்டு, காட்டுக் கூச்சலிடும் கும்பலின் முன்வரிசையிலே உள்ள சிலநூறு பேர்வழிகளை, மன்னர் படையினர் சுட்டுத்தள்ளி இருந்தால், பின்வரிசை யாவும் பீதி அடைந்து, சிதறி ஓடி இருக்கும். தவறிவிட்டார்கள் மன்னர் தரப்பினர் என்றான். செருக்கும் மன்னர்களின் மமதையும் சீமான்களின் நெப்போலியன் மனதிலே வெறுப்பை மூட்டியதுபோலவே மக்களின் காட்டுப்போக்கும் கடுங்கோபத்தை மூட்டிற்று.