பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் 133 I ஒருவர் சொல்லியிருக்கிறார், "நெப்போலியன், எரி நட்சத்திரம்போல! வளர வளர ஒளி அதிகமாகும் - வேறெந்த ஒளியையும் மிஞ்சும் அளவு. ஆனால் ஒளிமிகுந்திடமிகுந்திட, தன்னைத்தானே எரித்துக் கொண்டுவிடும் - எவ்வளவு அதிக மாக ஒளி காணப்படுகிறதோ அவ்வளவு அதிகமான நெருப்பு பிடித்துக் கொண்டது என்று பொருள் - எவ்வளவு வேக மாக ஒளி வருகிறதோ அவ்வளவு வேகமாக, பற்றி எரிந்து கொண்டு போகிறது என்று பொருள். இறுதி: கருகிப் போய் விடுகிறது. எரிநட்சத்திரம், நெப்போலியனுடைய வரலாறும் இதுதான்.' . இத்தாலி நோச்கிக் கிளம்பும்போது புகழ், புள்ளி அள வாகத்தான் இருந்தது. . பாரிஸ்-பள்ளி அறை-- பளிங்குக் கண்ணாடி-எனக் குப் பின்னால், முன்னால் இருப்பது புகழ் தரும் வெற்றிகள்! என்று எண்ணியபடி,களம் நோக்கிச் செல்கிறான். வழி யிலே, தங்குமிடங்களிலிருந்தெல்லாம், ஜோசபைனுக்குச் காதற் கடிதங்கள் தீட்டுகிறான். களம் வத்திராவிட்டால், என்னென்ன பேசிமகிழ்த்திருப்பானோ, அவைகளை எல்லாம் கடித மூலம் அனுப்பி மகிழ்கிறா -- மகிழ்விப்பதாகவும் எண்ணிக் கொள்கிறான். இத்தாலி மீது படை எடுத்துச் சென்று பிடித்திடவேண் டும் என்பது அரசு ஆணை. ஆனால் அதற்கு ஏற்ற வலிவு மிக்க படை உண்டா? இல்லை! வசதிகள் உண்டா? கிடை யாது! ஆனால் இவைகளைக் கூறித் தயக்கம் காட்டினானா என்றால் இல்லை. போரிலே ஈடுபட்டு பயிற்சி பெற்ற பொறி யியல் அதிகாரி ஒருவர்கூடக் கிடையாது. வத்தலும் தொந்த லுமான நாலாயிரம் குதிரைகள்; உணவு போதுமான அளவு இல்லை; செலவுக்கான பணம் மிகக் குறைவு. ஆனால், உடன் சென்ற படையினரிடம் வீரம் நிரம்பு! அதளை அதிக மாக்கத்தக்க உணர்ச்சியை, உற்சாகத்தை ஊட்டவல்ல வீர உரை நிகழ்த்தினான் நெப்போலியன். இந்தப் போரிலே நெப்போலியன் காட்டிய துணிவும் மேற்கொண்ட முறைகளும், வல்லரசுகள் பலவற்றுக்குக் குலைநடுக்கத்தை ஏற்படுத்திவிட்டன.