பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 இருபது ஆண்டுகள் லும். விடிய விடிய வேலை செய்வதுண்டு-உடன் இருப் போர், களைத்துப்போய்க் கண் அயர்வர்; நெப்போலியன் துளியும் சோர்வின்றி காணப்படுவான். உணவு உட்கொள் வதிலும் நெப்போலியன் அதிகமான ஆர்வம் காட்டுவதில்லை. படாடோபமான முறையிலே, பத்துப் பன்னிரண்டு வகை கள் கொண்ட விருந்து உண்டிடுவதிலே விருப்பம் கொள்வ தில்லை. பெரிய நிலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, பேரரசனான பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட ஆடம்பரமான விருந்திலேகூட அவன் மனம் ஈடுபட்டதில்லை. சீமான்கள் சீமாட்டிகளிடம் சிரித்துப் பேசிக்கொண்டே பல பண்டங் களைத் தொடுவதும் துண்டாடுவதும், சுவைப்பதும் சிதற விடுவதுமான முறையில் நெடுநேரம் விருந்து சாப்பிடுவது சம்பிரதாயம். ஒருபுறம் இன்னிசை! எங்கும் மெல்லிய குர லிலே பேச்சு. விழியாலே மொழி பேசும் கலை! நடந்தவை களை எண்ணிப் புன்னகை, நடக்க வேண்டியவைகளை நினைத்து ஏக்கப் பார்வை, பெருமூச்சு! இப்படி, மணிக் கணக்கிலே விருந்து நடைபெறும். நெப்போலியன் இத னைக் காலக்கேடு என்று கருதினான்--அரைமணி நேரத் திலே விருந்து வேலையை முடித்துக் கொண்டு, எழுந்துவிடு வான். மற்றவர்கள் பாடு திண்டாட்டமாகிவிடும். அவர்கள் அப்போதுதான், உள்ள பண்டங்களில் எதை உண்பது என்ற முடிவுக்கு வந்து, சிறிதளவு சுவைத்துக் கொண்டு இருப்பார் கள். நெப்போலியன் அதுபற்றிக் கவனம் செலுத்துவதில்லை தன் வேலை முடிந்ததும் எழுந்துவிடுவான். மாமன்னன் எழுந்தான பிறகு, மற்றவர்களும் எழுந்தாக வேண்டுமே! விருந்து முடிந்துவிட்டதாகத்தானே பொருள். எனவே, எழுந்துவிடுவார்கள்- விருந்து கலைந்துவிடும். விதவிதமான பண்டங்கள் வீணாகிக் கிடக்கும்; பசித்த வயிறோடு பலரும் தத்தமது இடம் செல்வர். மாமன்னன் நெப்போலியன் நடத்தும் விருந்துக்குப் போவதானால், போகுமுன் வீட்டில் வயிறு நிரம்பச் சாப் பிட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று பலரும் பேசுவர். பானங்கள் பருகுவதிலும் நெப்போலியனுக்கு ஆர்வம் அதிகம்