பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய எப்படி. முடிந்தது இத்தனை மகத்தான வெற்றி பெற? ---என்று கேட்டுக் கேட்டு வியந்தனர். பாரிசில் விழா! நெப் போலியனுடைய பெயர், ஒவ்வொருவர் பேச்சிலும். நெப் போலியன் நடத்திச் சென்ற படையிலிருந்தவர்களுக்கே பெரும் வியப்பு. முன்னேறித் தாக்கினால் வெற்றி பெற்றிட லாம் என்று நெப்போலியன் கூறியபோதுகூட, வழக்கமான பேச்சு இது என்றுதான் எண்ணிக் கொண்டனர்- நம்பிக்கை முழு அளவில் இல்லை. ஆனால் வாக்களித்தான்; வெற்றி கிடைத்துவிட்டதே! இவனன்றோ பெருந்தலைவன்!இவனை நம்பிச் செல்லலாம் எந்தக் களம் நோக்கியும்-என்ன ஆபத்து கள் குறுக்கிடினும்; கவலையின்றி! நம்மை வெற்றி நோக்கி அழைத்துச் செல்லும் வீரத் தலைவன் நெப்போலியன் களம் செல்வது என்றால் இத்தகைய மாவீரன் தலைமை யிலே செல்லவேண்டும். நெப்போலியன் காட்டிடும் வழி நடப்போம், வெற்றிபெற்றுப் புகழ்க் கொடி நாட்டுவோம்! என்று கூறிக் கொண்டாடினர் போர் வீரர்கள். படை யினருக்கும் நெப்போலியனுக்கும் முன்பே ஏற்பட்டிருந்த நேசம், பாசமாகிவிட்டது. இனி இது பிரான்சு நாட்டுப் படை மட்டுமல்ல, நெப்போலியனின் படை! வெற்றி பெற் றுக் காட்டிடும் வீரப்படை!! 140 விழாக்கள் நடத்திக் கொண்டு காலத்தை வீணாக்க வில்லை. ஒவ்வொரு எதிரி முகாமையும் சுற்றி வளைத்துக் கொண்டு தாக்கித் தகர்த்துவிட்டு, அவர்கள் சரண் அடை யும் நிலையை ஏற்படுத்தும் வரையில் நெப்போலியன் ஓய வில்லை. நெப்போலியன் நடத்திச் சென்ற படையிலே ஒரு தனித்தன்மை இருந்தது. வாலிப முறுக்கினர், போர்த்திறன் மிக்கவர்கள், தளபதிகளாக்கபட்டிருந்தனர். நரைத்த தலை யினர், நாற்பதாண்டு கால போர்க்கள அனுபவம் பெற்றவர் கள். இத்தகைய முதியவர்களே படைத்தலைமை ஏற்கவேண் டும் என்ற பழைய முறையை நெப்போலியன் மாற்றிவிட் டான். அவனே முப்பதாண்டினன்! எதிரிப் படைகளின் தலைவர்களோ பழங்கதைபேசிடும் பருவத்தினர்-ஆஸ்ட்ரியப்