பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் படைத்தலைவருக்கு வயது 72. மற்றோர் படைத்தலைவருக்கு 60 வயது - காது செவிடு! கீல்வாதம்! வாலிப முறுக்கினர்களே பெரிதும் கொண்ட பிரான்சுப்படை, துணிச்சலாகப் பாயும் போது, அந்த முதியவர்கள் தலையை அசைத்தபடி, இலக் கணப்படி சரியல்லவே! சமரிடும் முறை இது அல்லவே- சாகத் துடித்துக் கொண்டு வருபவர் போலல்லவா வருகி றார்கள் என்று முணுமுணுத்தனர். இவர்கள் போர்முறை இலக்கணம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது படைகளை முறியடித்தபடி வேறு பக்கம் பாய்ந்து கொண்டிருக்கும் நெப் போலியன் படை. 141 படையிலே இருக்கிறோம்; ஆகவே போரிடுகிறோம் என்று மட்டும் எண்ணம் கொண்டிருந்தால், ஒரு படை வீரப் படையாக, வெற்றிப் படையாக முடியாது. நாட்டின் பெரு மைக்காகப் போரிடுகிறோம் என்ற உணர்ச்சி எழவேண்டும்; பெருமைப்படத்தக்கது நம்நாடு என்ற உணர்ச்சியும் மேலோங்கி இருக்கவேண்டும். எப்படி இருப்பினும் என் நாடு! எது செய்தாலும் என்நாடு செய்வதே எனக்கு நியாய மானது என்ற குருட்டுப் போக்கைவிட, என் நாடு ஏற் றம் பெற்றது, என் நாட்டின் நினைப்பும் நடவடிக்கையும் நியாயமானது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். அப் போதுதான் போரிடும் ஆர்வம் கொழுந்துவிட்டு எரியும். நெப்போவியன் காலத்துப் படையினருக்கு, பிரான்சு நாடு பற்றி பெருமித உணர்ச்சி இருந்தது.பன்னெடுங் காலமாக கொட்டமடிந்து வந்த பட்டத்தரசர்களின் ஏவலை நிறை வேற்றுவதற்காகக் கூலி பெற்றுவந்த கும்பல் என்ற இழிவைச் கமந்து கொண்டு இருந்த படையினர், புரட்சி பூத்த பிறகு புதுமுறை கண்டு பூரித்தனர்; பெருமை கொண்டனர். அது மட்டுமல்ல, புது முறைக்கு ஆபத்து ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளும் பொறுப்பு தம்முடையது என்று உணர்ந்தனர்; ளிரட்டப்பட்ட பிரான்சு மன்னர்கள்-போர்போன் வம் சத்தினர் - ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலே சதிக்கூடங் களை அமைத்திருந்தனர். பல்வேறு நாட்டு மன்னர்கள் மீண்டும் பிரான்சிலே போர்போன் வம்சத்தை முடிதரிக்கச்