பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் ஆஸ்ட்ரியப் படையின் தாக்குதலைக் கண்டு பீதி கொண்டு படைப் பிரிவுகளில் இரண்டு பின்வாங்கி ஓடின. நெப்போலியன், அந்தப் பிரிவினரை மற்றவர் முன்பு அணி வகுத்துச் செல்லச் செய்து கடுங்கோபத்துடன் கண்டித்து, அந்தப் பிரிவுகளின் கொடிகளிலே, 'இவர்கள் இத்தாலிய எதிர்ப்புப் படையினர் அல்ல-இனி -" என்ற கண்டனத் தைப் பொறித்திடச் செய்தான். சுட்டுத் தள்ளுவது, கட்டி வைத்து அடிப்பது, கொட்டடியில் போட்டு அடைப்பது போன்றவைகளைவிட, இந்தக் கண்டனமுறை, வாட்டி வதைத்தது. இழிவைச் சுமக்கச் சொல்லி அல்லவா, தண் டனை! அப் பிரிவினர், 'மற்றோர் வாய்ப்பளியும் எமது வீரத்தை விளக்கிட' என்று கேட்டு மன்றாடினர். 143 உள்ளத்தைத் தொடத்தக்க புதிய முறைகள் இது போலப் பலப்பல. நெப்போலியன் இத்தாலியக் களத்திலே நடத்திய பல போர்களுக்கான செலவுக்காக, அவ்வப்போது பிரான்சி லிருந்து பணம் அனுப்பச் சொல்லிக் கேட்டுத் தொல்லை தரவில்லை. போர் செலவுக்கான பணத்தை, பெற்ற வெற்றி களின் மூலமே திரட்டிக் கொண்டான். பிரான்சு அரசுக்கு, பெரும் செலவு இல்லாமலேயே, பல வெற்றிகள் பல நாடு கள் கிடைத்தன. . இத்தாலி நாடு. கலைக்கூடம் அல்லவா. அங்கிருந்து ஏராளமான கலை அழகுப் பொருள்களை, காலத்தை வெல் லும் கீர்த்தி மிக்க ஓவியங்களை, நெப்போலியன், பிரான்சு நாட்டுக்கு அனுப்பிவைத்தான். இத்தாலி நாட்டிலே, ரோம் அரசிலே, பெரும்படைத் தலைவனாக இருந்த ஜூலியஸ் சீசர் தான் வெற்றி பெற்ற நாடுகளிலிருந்து அரிய பொருள்களை ரோம் நகர மக்கள் கண்டு மகிழவும் பெருமைப்படவும் அனுப்பிவைத்தான்… முன்பு. இப்போது ஜூலியஸ் சீசர் வெற்றி நடை போட்ட வீரக் கோட்டத்திலிருந்து விதவிதமான கலைப் பொருள் களை, நெப்போலியன் பிரான்சுக்கு அனுப்பி வைத்தான்.