பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 இரத்தம் பொங்கிய பிரான்சு நாட்டுப் பத்திரிகைகளிலே கட்டுரைகள், கதைகள், கவிதைகள், கேலிச்சித்திரங்கள் இப்படி இப்படி வரவேண்டும் என்று. உள்துறை அமைச்சர் மூலம், யோசனைகள் என்ற பெயரால் புதிய கட்டளைகள் பிறப்பித்தான், நாடாளும் நாயகனான பிறகு. பல்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கு. இடையில், பத்திரிகை மூலம் என்னென்ன கருத்துகள் மக்க ளிடம் பரப்பப்படுகின்றன என்பதை கவனிக்காமலில்லை. இங்கிலாந்து நாட்டிடம் பிரான்சு மக்களுக்கு வெறுப்பு எழ வேண்டும். அப்போதுதான் போரார்வம் எழும். ஆனால் அந்த வெறுப்பும் பகை உணர்ச்சியும் எங்ஙனம் மூட்டப்பட வேண்டும்? இது தெரியாதா, பத்திரிகை நடத்துபவர்களுக்கு என்று நெப்போலியன் இருந்து விடவில்லை. அயர்லாந்து நாட்டினை அடிமை கொண்டு அவதி மூட்டுவதுபற்றி, தீப் பொறி பறக்க எழுதுங்கள். அயர்லாந்து நாட்டு கத்தோவிக் கர்களை, இங்கிலாந்து நாட்டு மதப் பிரிவினர் கொடுமை செய்வதை எடுத்துக் காட்டுங்கள்--பிராடெஸ்ட்டெண்டுகள் கத்தோலிக்கர்களைக் கொடுமை செய்கிறார்கள் என்று பொதுப்படையாக எழுதாதீர்கள்-ஏனெனில் பிரான்சிலே உள்ள பிராடெஸ்ட்டெண்டுகளுக்கு மனச்சங்கடம் ஏற்படும்! இங்கிலாந்து நாட்டிலே உள்ள மதப் பிரிவினர் என்று எழுதி, அவர்களைத் தாக்குங்கள்!-- என்று நெப்போலியன் இதழ் நடத்துபவர்களுக்கு எடுத்துக்கூறினான் என்றால், எவ்வளவு நுணுக்கமான முறையில், பிரச்சினைகளை அலசிப் பார்த் திருக்கிறான் என்பது விளங்குகிறதல்லவா? இத்தனை அறிவாற்றலையும் பயன்படுத்த வாய்ப்பு எழவில்லை- எழத்தான் போகிறது என்பதிலே ஐயமில்லை -எப்போது, எந்த முறையில் என்பது பற்றி எண்ணியபடி. இருந்துவந்தான். கார்சிகா தீவு விழா நடத்திற்று, வரவேற்பு வைபவம்! துரோகிகள் என்று முன்பு கண்டனக் குரலெழுப்பி, குத்திக் குடலெடுப்போம் என்று கொக்கரித்தார்கள் அல்லவா, நெப்போலியனுடைய ளீட்டைச் சூழ்ந்துகொண்டு, அதே.