பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் மக்கள், அவன் புகழ் பாடுகிறார்கள். பிரான்சு நாடு கொண்டாடும் மாவீரன், இங்கல்லவா பிறந்தான்! என்று சொந்தம் கொண்டாடுகிறது. நெப்போலியனை வரவேற்றா? இல்லை! அவன் வரவில்லை. தாயார் லெடிசா அம்மையார் வந்திருந்தனர்; அந்து வருகை, விழாவாயிற்று. 153 எங்கும் நெப்போலியனைப் பற்றியே பேச்சு இருந்து வந்தது-- என்ன செய்யப் போகிறான் இப்போது? அரசு என்ன பணியினைச் செய்யும்படிக் கூறப்போகிறது? எந்த நாட்டின்மீது படை எடுக்கப் போகிறான்? என்ன திட்ட மிட்டுக் கொண்டிருக்கிறான் என்றெல்லாம். ஏன், நெப்மே லியனே நாட்டை ஆளக்கூடாதா? ஆற்றல்மிக்கோன் அரசாளாமல் வேறு எவர் ஆட்சி நடத்துவது? ஆமாம்! அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நெப்போலியன் கண் காட்டினால் போதும், காலடியில் வந்து விழும் மணிமகு..ம்! அவனுக்காக உயிரையே கொடுத்திட உறுதி கொண் டுள்ள படைவீரர்கள் இலட்சக்கணக்கினர் உளர். அவர்களுடன் நெப்போலியன் தொடர்பு கொண்டி ருக்கிறான் -- திட்டம் தயாரிக்கப்படுகிறது- ஆட்சியைக் கைப்பற்ற. ஆட்சி மன்றத்தை அவன் படையினர் சுற்றி வளைத்துக் கொள்வர்-ஆட்சிப்பொறுப்பில் உள்ளோருக்கு ஆணை பிறப் பிக்கப்படும். துப்பாக்கி முனையில், "வீரன் வருகிறான்; விலகி நில்லுங்கள்! என்று.