பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் சிறந்து, பொருள்மிக ஈட்டி, வீழ்ச்சியறியாத கப்பற்படை யுடன், வீரக் கோட்டமாக விளங்கிவருவதுடன், ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலேயும் செல்வாக்கு பெற்றுத் திகழ்கிறது. இது ஒழிக்கப்பட்டாக வேண்டும். இங்கிலாந்து வீழ்த்தப்பட் டால், அதன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரப் பட்டிருக்கும். கீழைப்பக்க நாடுகள் பலவும், பொன் விளையும் பூமி நமது கரம் சிக்கும். சிக்கினால்...! 155 இந்த இன்பக் கனவு காணாத பிரான்சுக்காரன் இல்லை. எனவே நெப்போலியன், இங்கிலாந்தைத் தாக்கும் படைக் குத் தலைவனாக்கப்பட்டது வரவேற்கப்பட்டது. நெப்போலி யனும், தன்னிடம் ஒப்படைக்கப்படும் வேலையை வெற்றி யுடன் முடித்திட யாது செய்திட வேண்டும் என்பதற்கான எண்ணங்களை ஆராய்ந்தான். ஒரு பேருண்மையைக் கண்ட றிந்தான் -- கப்பற்படை வலிவுடன் அமைந்திருந்தாலொழிய இங்கிலாந்து நாட்டை வீழ்த்த முடியாது என்ற பேருண் மையை மறுக்க முடியாத மற்றோர் உண்மை அனைவருக்கும் தெரியும்! பிரான்சிடம், தரமான கப்பற்படை இல்லை! எனவே நிலைமை முற்றிலும் திருத்தி அமைக்கப் பட்டாலொழிய, இங்கிலாந்தைத் தாக்கும் திட்டத்தை மேற்கொள்வதற்கில்லை என்ற முடிவுக்கு வந்தான். பெரும் பறவை கணைகளால் வீழாது—முதலில் பறவையின் பெரும் சிறகுகளை வெட்டிச் சாய்த்திட வேண்டும். சிறகு வெட் டுண்ட நிலையில், பறவை, விண் நோக்கிப் பறந்து, கணைக் குத் தப்பவும் முடியாது; மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து தாக்கவும் முடியாது. இங்கிலாந்து நாட்டை வீழ்த்த, இங்கி லாந்தை உடனடியாகத் தாக்கிப் பயனில்லை; கீழை நாடு களைக் கைப்பற்றி எங்கிருந்து இங்கிலாந்து வலிவுகளைப் பெறுகிறதோ அந்த இடங்களைத் தகர்த்துவிடவேண்டும். முதலில்! அப்போது சிறகிழந்த பெரும் பறவையாகிவிடும் இங்கிலாந்து. இந்த நோக்கத்துடன், நெப்போலியன், புதிய திட்டம் எடுத்துரைத்தான்—எகிப்து நாட்டின்மீது பாய் வது என்ற போர்த் திட்டத்தை: