பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 இருபது ஆண்டுகள் கண்வலை வீசினால், சிக்காதவன் இல்லை-மேக மண்டலங் களால் தம்மை மறைத்துக் கொண்டதால் விண்ணகத்து வீராதி வீரர்கள் தப்பினார்கள் போலும்; இந்த மண்ண"த் திலே அவளுடைய பார்வை பெற்று வீழாதார் இருக்க முடி யாது என்று கற்பனை மிகுதியுடன், ஆனால் கருப்பொரு ளாக உண்மையை அமைத்துக் கொண்டு கவிகள் களிப்புடன் பாடியது, கிளியோபாட்ரா பற்றி!! அழகும் ஆற்றலும்- அவளும் அவனும் -கொடியும் தருவும்-- குழைவும் வும்---தாக்குதலும் தளர்வும்! குலை அந்த எகிப்திலே,சீசருக்கும் முன்னாலே,பல நூற்றாண்டு களுக்கு முன்பே, மற்றோர் மாவீரன், கிரேக்கத்தில் பிறந்து அந்த நாட்களிலே குறிப்பிடத்தக்க நாடுகளிலே எல்லாம் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டிய மாவீரன் அலெக்சாண் டர் உலவி இருக்கிறான். அவன் அமைத்துச் சென்ற அரசில், கிரேக்க வீரமும் எகிப்திய எழிலும் இணைந்ததால் விளைந்த பொலிவுமிகு மலராளே, கிளியே:ாபாட்ரா! நாலாயிரம் ஆண்டுகளாக நானிலம் வியந்து பேசிக் கொண்டு வருகிறது, எகிப்து பற்றி. அங்கு செல்கிறான் நெப்போலியன்-ஃப்பல்களிலே படை வீரர்களை ஏற்றிக் கொண்டு. சென்றேன் -- கண்டேன்--வென்றேன் என்று கூறினவ னல்லவா, ஜூலியஸ் சீசர்-ஆனால் பாவம், அந்த வர லாற்றை, வந்தான்—வீழ்ந்தான்- என்று முடித்துவிட்டாள் வடிவழகி கிளியோபாட்ரா! நல்லவேளையாக, நெப்போலியன் செல்லும் நாட்களில் மான்விழி மாதர் மையலூட்டி வீரர்களை வீழ்த்தும் நிலை இல்லை - ஆனால் பாய்ந்து தாக்கிப் பயங்கரப் போரிடும் மறவர் கூட்டம் மிகுந்திருந்தது. சீசருக்கு ஏற்பட்ட விசித்திர