பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய புரட்சி!- படைத் தலைமையை எதிர்த்து. மாவீரன் அலெக் சாண்டருக்கே இந்தத் தொல்லை ஏற்பட்டிருக்கிறதே. இதை அறிந்திருந்ததால், நெப்போலியன் தனக்கு ஏற்பட் டிருந்த சங்கடத்தையும் தாங்கிக் கொண்டு, போர் வீரர் களுக்குக் கவலை மேலெழாதிருக்க என்னென்ன செய்வது என்று திட்டமிட்டான். கேளிக்கைக் கூடங்கள்—சூதாடும் அரங்குகள் --- நாடக மன்றங்கள்-நாட்டியக் கொட்டகை கள் -- உல்லாசத் தோட்டங்கள்—இவைகளை அமைத்து, வீரர்கள் மகிழ்ச்சி பெறச் செய்தான். 162 படமெடுத்தாடும் பாம்பு முன் குழலூதி ஆட வைப் போன் பாம்பென நெளிந்தாடும் பாவையர் மேனி அழகை முற்றிலும் மறைத்திடாத முறையில் இருந்த நேர்த்திமிகு மேலாடைகளையும் பந்தயப் பொருளாக ஏற்றுக் கொள்ளும் கழலாடுமிடங்கள், இசைபாடி மகிழ்விப்போர்,-இப்படிப் பலவகை. இதுமட்டும் போதாது என்பதை உணர்ந்த நெப்போலி யன், வீரருக்கு விருப்பமான பொழுதுபோக்கு, போர் என்ற முறைக்கு ஏற்ப, சிரியா மீது போர் தொடுத்தான். வேலை வந்தது; விசாரம் தொலைந்தது என்று எண்ணிப் படையினர் கிளம்பினர். ஆனால் சிரியாவின் கோட்டை நகரை முற்றுகை யிட்டு மும்முரமாகப் போரிட்டும் வெற்றி கிட்டவில்லை- பிரிட்டிஷ் தளபதி ஒருவன் பீரங்கிப் படையை அமைத்துக் கொடுத்ததால், சிரியா, தாக்குப் பிடித்தது மட்டுமல்ல, நெப்போலியன் படையை விரட்டித் தாக்கவும் முடிந்தது. சிரியாக்காரரின் தாக்குதலைவிடக் கொடுமையாக பிளேக் காய்ச்சல் நோய் தாக்கிற்று. பலர் மாண்டனர்; பலர் குற்றுயிராயினர். படை முற்றுகையிட்டுப் பலன் காணா .