பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய விளக்கத்தைக் கேட்டுவரும்படி, நெப்போலியனிடம். எதிரே கூடி இருந்தோர் உள்ளம் புல்லரித்துப் போயிற்று, நெப்போ லியன் அப்போது நிகழ்த்திய உரை. பாராஸ் அனுப்பிய ஆசாமியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, மிகவும் உருக்க மான குரலில், 166 "கீர்த்திமிக்க நிலையில் உங்களிடம் நான் ஒப்புவித்து விட்டுப் போன பிரான்சு நாட்டை என்ன செய்தீர்கள்? அமைதியை ஏற்படுத்திவிட்டுச் சென்றேன்; வந்து காண்கி றேன், அமளியை! வெற்றி வீரர்களாக்கிவிட்டுச் சென்றேன்; இப்போது தோல்வி தாக்குகிறது; இத்தாலியிலிருந்து கொண்டு வந்த பெரும் பொருளைத் தந்துவிட்டுச் சென்றேன்-இப் போது தவிப்பு, பிற்போக்குத்தனம், தொல்லைகளைக் காண்கிறேன். கீர்த்திமிக்க போர்களிலே என் உடனிருந்த ஆயிரமாயிரம் ஆற்றல் மறவர்கள்—இத்தாலிய களங்களிலே வெற்றி தேடித்தந்த வீரப் புதல்வர்கள் எங்கே கொல்லப் பட்டுப் போயினர்?- என்று நெப்போலியன் பேசினான்- அந்தப் பேச்சு, பிரான்சு நாட்டை ஆளும் பொறுப்பினை அவனுக்குப் பெற்றுத் தந்துவிட்டது என்று கூறலாம். உயர் தரமான கருப்புக் குதிரைமீது அமர்ந்தபடி நெப்போலியன் ஆற்றிய இந்த வீர உரை கேட்டவர்கள் நாடு நெப்போலிய னிடம் ஒப்படைக்கப்பட்டாலன்றி இழிவு துடைக்கப்பட முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். இழிவு துடைக்கப்பட வேண்டும், இரத்தம் கொண்டு கழுவினால் மட்டுமே, இழிவு போகும் என்றான் நெப்போலியன். சரி! தயார்! என்றனர் வீரர்கள். இரத்தம் பொங்கிற்று!-மேலும் மேலும்; வெற்றி கள் கிடைத்தன. ஒன்றன்பின் ஒன்றாக. கிளம்பிய எதிர்ப்புணர்ச்சிகளை முறியடிக்க, நெப்போலியன் பக்கம் திரண்டுவிட்டது. ஆட்சி மன்றத்தின் படை