பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 இருபது ஆண்டுகள் அவைத் தலைவராக இருந்த லூசியன் உடன் பிறந்தானுக்காக உன்னதமான நாடகம் வேறு நடத்தினான். 'நெப்போலியன் ஆட்சி நடத்தும் பொறுப்பு ஏற்கவேண்டியதுதான். ஆனால், என்று கூறியபடி, வாளை உருவினான் லூசியன். நெப் போலியனுடைய மார்புக்கு நேராக அதை வைத்தபடி பேசி னான்; ஆனால், மக்களின் உரிமையை அழிச்க இந்த நெப்போலியன் முயன்றால், கூர்வாளைப் பாய்ச்சுவேன், கொடியோன் மார்பில்;கொன்று போடுவேன், உடன் பிறந்த வன் என்ற எண்ணம் துளியுமின்றி" என்று பேசினான். இதனைக் கண்ட மக்களின் கண்களிலே நீர் துளிர்த்தது. லூசியனும் நெப்போலியனும் நடாத்திய நாடகம் வெற்றி பெற்றது, சய்யீஸ், டூகோஸ், நெப்போலியன் எனும் மூவரிடம் ஆட்சிப் பொறுப்பு தரப்பட்டது-அதிலே முதலிடம் நெப்போலியனுக்கு. பிறகு செய்து முடித்த அரசியல் திட்டங்களின் பயனாக முதலிடம், முழு இடமாகிவிட்டது. நெப்போலியன், ஈடு எதிர்ப்பற்ற நிலை பெற்றான். ஆட்சி மன்றங்கள் எதற்கும் நெப்போலியனைக் கட்டுப் படுத்தும் அதிகாரம் கிடையாது-ஆட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும், மறைமுக வாக் கெடுப்பின் மூலம்! இப்படிப்பட்ட மாறுதல் புகுத்தப்பட்டது. அரண்மனையிலே அடைபட்டுக் கிடக்கும் அதிகாரங்களை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்திடத்தான் மாபெரும் புரட்சி நடந்தது; ஆனால் இப்போது, மாமன்னரிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரம் அனைத்தும் மாவீரனிடம் ஒப்ப டைக்கப்பட்டுவிட்டது. பட்டம் சூட்டிக் கொள்ளவில்லையே தவிர, பட்டத்தரசர்களுக்கெல்லாம் கிட்டாத அதிகார பல மும், மக்கள் ஒப்புதலும் நெப்போலியனுக்குக் கிடைத்தது.