பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய புதிய மாறுதலுக்கு இசைவு தந்து 3,011,007 மக்கள் வாக்களித்தனர்; மறுத்தவர் தொகை 1,562. பத்து ஆண்டுகள் பதவிக் காலம் என்று அறிவிக்கப் பட்டது. 168 1799ம் ஆண்டு இந்த நிலை கிடைத்தது, நெப்போலி யனுக்கு. 1800ம் ஆண்டு, ஆல்ப்ஸ் மலையைக் கடக்கிறான். ஆஸ்ட்ரியாவைச் செம்மையாகப் புடைத்து மாராங்கோ எனும் களத்தில் வெற்றி பெறுகிறான். இழிவு துடைக்கப்பட்டது என்ற எக்களிப்பு, மக்களுக்கு. இத்தகைய வெற்றி பெற்றளிக்கத்தக்கவனை பத்து ஆண்டு களா, அவன் உயிருள்ள மட்டும், அதிபனாகக் கொள்ள லாமே! என்றனர் மக்கள் ஆர்வத்துடன். தோற்கடிக்கப்பட்ட ஆஸ்ட்ரியாவுடன் தொடர்ந்து பகை கொண்டால், மற்ற களங்களிலே கவனம் செலுத்த இயலாது என்பதால், 1801-ல் ஆஸ்ட்ரியாவுடன் சமாதானம் செய்து கொண்டான். போப்பாண்டவருடன் மூண்டுகிடந்த பூச லையும் விட்டொழித்து, சமரசம் ஏற்படுத்திக் கொண்டான். 1802ம் ஆண்டு இங்கிலாந்துடன் நேச ஒப்பந்தம் செய்து கொண்டது நீடிக்கவில்லை; மறு ஆண்டே போரிடவேண்டி நேரிட்டது. இதற்கிடையில், விரண்டோடிய போர்போன் வம்ச மன்னர் குடும்பத்தினரும், இங்கிலாந்து போன்ற பகை நாடு களும் மூட்டிவிட்ட கூட்டுச் சதியால், நெப்போலியனைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டது. தப்பித்துக் கொண்டான்.