பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 இருபது ஆண்டுகள் தல் காரணமாக, தமது உணர்ச்சிகளை மறைத்துக் கொள் ளக் கூடும், ஆனால் அவை அடியோடு மாய்ந்துவிடுவதில்லை --- ஏனெனில் அந்த உணர்ச்சி ஊனில் உயிரில் கலந்து விட் டிருக்கிறது. தலைமுறை தலைமுறையாகப் பையப் பைய வளர்ந்தது அந்த உணர்ச்சி. காவியத்திலும் ஓவியத்திலும் கலந்து நிற்கிறது. மொழி, அதற்கான வழி காட்டுகிறது. இத்தகைய உணர்ச்சியை உருக்குலைக்க முனைவானேன்? பல தனித்தனி வடிவங்களைப் பொடிப் பொடியாக்கி, புதிய கலவை முறை கண்டுபிடித்து, பேருரு அமைப்பா னேன்? நெப்போலியன் இதற்கான விளக்கம் தரவில்லை. பேரரசு அமைக்க வேண்டும் என்று கூறினான் - தக்க பொருள் அமைந்த காரணம் காட்ட முடியவில்லை. ஐரோப்பாவிலே அமளியற்ற நிலை ஏற்பட்டுவிட்டால், பிறகு, இங்கிலாந்தை ஒழித்துக்கட்ட எளிதாக முடியும் என் பது அவன் எண்ணம். இங்கிலாந்து பிற்போக்காளர்களின் பிறப்பிடம்; பிரபுக் களின் கொலுக்கூடம் என்பது நெப்போலியன் கொண்ட கருத்து. சுரண்டிப் பிழைப்பதும் சுகபோகம் அனுபவிப்ப தும், இதற்குச் சூதுமுறைகளை மேற்கொள்வதும், இங்கி லாந்து நாட்டும் பரம்பரைக் குணம் என்று கண்டிப்பது வாடிக்கை. வீரதீர மிக்கவர்கள் அல்ல, இங்கிலாந்து நாட்டவர்; பெட்டிக் கடைக்காரர்கள் அந்நாட்டு மக்கள் என்று ஏளனம் செய்வான். அங்கிருந்து கிளம்பிய வெலிங்டன்தான், தன்னை இறுதி யாக வீழ்த்தப் போகிறான் என்று நெப்போலியன் துளிகூட எண்ணவில்லை.