பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 இரத்தம் பொங்கிய 1807ல் போர்ச்சுகல் மீது படை எடுப்பு. 1808ல் ஸ்பெயினைத் தாக்கிப் பிடிக்கிறது பிரான்சுப் படை; ஜோசப் மன்னனாக்கப்படுகிறான். ஸ்பெயின், இங்கிலாந்தின் துணைநாடிப் பெறுகிறது; அங்கு இருந்துகொண்டு, வெலிங்டன் ஆறு ஆண்டுகள் போர் நடத்துகிறான் -வாடர்லூவுக்கு ஒத்திகை நடத்துவதுபோல் 1808 முதல் 1814 வரையில், ஸ்பெயினுக்காக நடைபெற்ற போரில், பிரான்சு மிக அதிக அளவிலே இரத்தம் கொட்டி தோற்றது. நேச உறவு கொண்டிருந்த அலெக்சாண்டர், கெக்கலி செய்யாதிருப்பாரா? நையப் புடைத்த பிறகுதானே, நெப் போலியன் அவரிடம் நேசக்கரம் நீட்டினான். இப்போது பிரான்சின் புகழ் பாழ்படும்படி ஸ்பெயினிலே தோல்வி ஏற் பட்டது கண்டதால், இனி நெப்போலியனுக்கு இறங்குமுகம் கண்டுவிட்டது என்று எண்ணி, எதிர்ப்புக் காட்டலானான், அதிபன். நேச உறவு கெடாதபடி பார்த்துக் கொள்ள, ரஷிய அதிபருடன் நெப்போலியன் எர்பட் எனும் இடத்தில் பேசு கிறான்—பாவனைதான் அதிகம், உண்மைப் பாசம் எழ வில்லை. 1809ல், வாக்ராம் எனும் களத்தில், மறுபடியும் ஆஸ்ட்ரியாவை முறியடித்து நெப்போலியன் தன் புகழை நிலைநாட்டுகிறான். ஒரு இடத்திலே தோல்வி ஏற்பட்டால், இழிவு உண் டாகிறது. உடனே அதனைத் துடைத்தாக வேண்டும். இல்லையென்றால், உள் நாட்டிலே மதிப்பு மங்கிவிடும்,