பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 176 இருபது ஆண்டுகள் எனவே வேறு ஓர் களம் ஏற்படுத்திக் வெற்றி பெற்றுக் காட்டித் தீரவேண்டி ஏற்படுகிறது. நெப்போலியன் சில நிலைமைகளை உண்டாக்கி விட் டான் முதலில்; பிறகு அந்த நிலைமைகள் அவனை ஆட்டிப் படைக்கலாயின. கொண்டாகிலும்

  • பரம்பரை மன்னர்கள் பலமுறை தோற்கலாம்; பாதக

மில்லை! மக்கள் மன்னனிடம் கொண்டுள்ள மதிப்பைக் குறைத்துக் கொள்ள மாட்டார்கள்; அந்த மதிப்பு பக்தி யாகி விட்டிருக்கிறது; என் நிலை அப்படிப்பட்டது அல்ல; 'ராஜ பக்தி' எனும் அடிப்படைமீது நான் நின்று கொண் டில்லை; ஆற்றலால் அரசாளும் நிலை பெற்றேன்; அந்த ஆற்றல் குறைகிறது, குலைகிறது என்றால், களத்திலே தோல்விகள் கண்டால், போற்றுவோர் தூற்றத் தொடங்கு வர்; வாழ்த்தி நிற்போர் வசை பாடுவர்; அடங்கிக் கிடப் போர் ஆர்ப்பரிப்பர்; ஆபத்து ஏற்படும் என் பதவிக்கு. என்று நெப்போலியன் ஒருமுறை கூறினான். முற்றிலும் உண்மைதான்! ஆனால், பல இலட்சக்கணக்கானவர்களைக் கொன்று குவித்து, இரத்தம் பொங்கச்செய்து வெற்றிகளைப் பெற்று ஒரு தனிமனிதனின் நிலையை, பதவியைக் காப்பாற் றிக் கொள்வதால், அவனைத் தாங்கி நிற்கும் நாட்டுக்கும், பின்பற்றும் மக்களுக்கும் என்னபலன் கிடைக்கிறது. வெற்றி! வெற்றி! மகத்தான வெற்றி! என்ற முழக்கம்தானே அவர் கள் கண்ட பலன். உரிமைகள் அழிகின்றன; வாழ்வு ஆபத்து சூழ்ந்ததாகிறது. பொருள் பாழாகிறது; மக்களிடம் மிருககுணம் மேலோங்கி விடுகிறது; தேவைதானா? சியலிலேயும் பல புதிய சிக்கல்கள்! களங்களிலே இந்த நிலை எனில் பிரான்சு நாட்டு அர