பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய நெப்போலியனைக் கொல்லச் சதிகள்! எதிர்க்க ஏற் பாடுகள்! விரட்ட திட்டங்கள், அவ்வப்போது எழுகின்றன. திறமைமிக்க போலீசுப் படையும் உளவாளரும் இருப்பதா லும், அவர்களைவிடத் திறமையாக நெப்போலியன் எந்தக் காரியத்தையும் கவனித்துக் கொள்வதாலும், சதிகாரர் வெற்றி பெறவில்லை. 176 நண்பர்கள் கூறுகிறார்கள். 'வாரிசு இல்லாதவராகத் தாங்கள் இருப்பதால்தான், சதிகாரர்கள் தங்களைத் தீர்த்து கட்டிவிட்டால் பழைய மன்னர் ஆட்சியை ஏற்படுத்தலாம் என்று எண்ணுகிறார்கள். ஆகையால்...' 'என்ன செய்ய வேண்டும்! “நாட்டுக்கு ஒரு இளவரசன் வேண்டும்; மகன் வேண்டும்." "ஜோசபைன் தாயாக வேண்டும்.' "ஆகக்காணோமே, அறிகுறியும் இல்லையே... "அவள் அழகும் என் ஆற்றலும் கலந்து ஒரு குழந்தை பிறந்தால்..." "நாடே கொண்டாடும். ஆனால், எதிர்பார்த்து ஏமாற் றம்தான் காண்கிறோம். ஆகவே..." ‘‘ஆகவே...?’’ "தாங்கள் வேறோர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்...'