பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் "ஜோசபைன் இருக்கும்போதா! என் காதலரசி இருக் கும்போதா?" 177 'இன்றுபோல் என்றும் ஜோசபைன், காதல் அரசி யாக இருக்கட்டும்! பட்டத்தரசியாக வேறோர் பாவையைத் தேடித் திருமணம் முடித்துக் கொள்ளவேண்டும். அவர்கள் நாட்டுக்கு ஒரு இளவரசனைப் பெற்றளித்தால், பேராபத்து யாவும் மடிந்தொழியும். 33 துவக்கத்தில் துளியும் இணங்கவில்லை நெப்போலியன். இறுதியில் பெண் தேடும் படலம் ஆரம்பமாயிற்று. ஜோச பைன் விவாக விடுதலைக்கு இணங்கவேண்டி நேரிட்டது. கண்ணீர் பொழிந்து, காலடி வீழ்ந்து பார்த்துப் பலன் ஏற் படாததால். 1810ல், ஆஸ்ட்ரிய நாட்டு அரசிளங்குமரி, மேரி லூயியை மணம் செய்து கொள்கிறான் -- அரச வம்சத்துடன் கலப்பு!! அடுத்த ஆண்டு மகன் பிறக்கிறான்! குழந்தை ரோமா புரி அரசன் என்ற பட்டம் பெற்றுவிடுகிறது; பரம்பரை ஏற் பட்டு விட்டது!! கணக்குப் பாடத்திலே வல்லவன் நெப்போலியன்- ஆனால் ரஷிய நாட்டைப் பற்றிச் சரியான கணக்குப்போட மட்டும் தெரியாமலே போய்விட்டது. பகை கக்கியபடி இருந்த ஆஸ்ட்ரியா, சம்பந்தி நாடாகி விட்டது. புதிய பலம் என்று தப்புக் கணக்குப் போட்டான்