பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய ஒரு முகடுமீதேறி, பிரான்சுப் படை, தொலைவிலே தெரியும், மாஸ்கோ நகரைக் கண்டு களிக்கிறது. 182 உள்ளே செல்கிறது படை! போரிடுவாரும் இல்லை; சரணடைந்தோம் என்று கூறுவாரும் இல்லை. ஆள் அர வமே இல்லை. மாஸ்கோ காலிசெய்யப்பட்டுவிட்டிருக்கிறது. கடுங்கோபம் பிரான்சுப் படையினருக்கு. ஆனால் யார் மீது காட்டுவது? கட்டடங்கள் மீது; அங்கு கிடந்த விலையுயர்ந்த பொருட்களின் மீது! போரிட வந்த படை கொள்ளை அடிக் கிறது வேறு வேலை? மாளிகைகளிலும் மாதா கோயில் களிலும் பொன்னும் பொருளும் விலையுயர்ந்த கலைக் கரு வூலங்களும் கிடைக்கின்றன. பத்திரப்படுத்திக் கொள்கிறார் கள், பாரிசுக்கு எடுத்துச் செல்ல! பளிங்காலான கோப்பைகள், பட்டாலான அங்கிகள், வைரம் இழைத்த சிலுவைகள், வண்ணம் நிறைந்த கிண்ணங்கள், தங்க நகைகள், கண்கவரும் வனப்புள்ள ஓவியங்கள்!! காலமெல்லாம் காட்டிக் காட்டி மகிழலாம்--- தலை முறை தலைமுறையாக இல்லத்தில் இருக்கும், பெருமை தரும் பொருளாக என்று எண்ணி எடுத்துவைத்துக் கொள்கிறார் கள். எத்தனை விருப்பத்துடன் ரஷியர்கள் இந்தப் பொருட் களைச் சேர்த்து வைத்திருந்தனரோ, பாவம். அவ்வளவு பிரான்சுக்கு! மாஸ்கோவுக்குப் பொலிவளித்த பொருள் அத்தனையும் பாரிசுக்கு-என்று நினைக்கின்றனர். முன்பு எடுத்துச் செல்லவில்லையா, இத்தாலியிலிருந்து; அதுபோலத் தான் என்ற எண்ணம். ஆனால், இத்தாலியா,ரஷியா!! ஒரு பொருளும் போய்ச் சேரவில்லை பாரிசுக்கு! பொருளைக்