பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 இரத்தம் பொங்கிய லும் வெள்ளை வெளேரென்ற பனிக்கட்டிகள்!! பிரான்சுப் படையினரில் பல்லாயிரவர் செத்து கீழே சுருண்டு சுருண்டு விழுந்தனர். எவ்வளவு பயங்கரச் சண்டையென்றாலும், இத்துணை கோரமான பிணக்குவியல்களைக் காணமுடியாது. அழைத்துச் சென்ற வீரர்களில் மிகப்பெரும்பகுதியை இழந்து, துக்கம் துளைத்திட, வெட்கம் வேலாகிக் குத்த, நெப்போலி யன் பாரிசு திரும்பினான். பயத்தால் வெளுத்த முகம், பனி யால் ஏற்பட்ட வெடிப்புகள், நடமாடும் வேதனையானான்! நாடு பல பிடித்து, விருதுகளுடன் வீடு திரும்பி விழா காண் பவன். ரஷியர்கள் பழி தீர்த்துக் கொண்டனர். எந்தப் பகைவனாலும் சாதிக்க முடியாததை, ரஷியப் பனிமழை சாதித்துவிட்டது. விரண்டோடாத நெப்போலியன் படை சுருண்டு வீழ்ந்தது. நெப்போலியனுக்கு இனிப் புகழ் தரும் எதிர்காலம் இல்லை; அது உறைபனியிலே புதையுண்டுவிட் மின்ஸ்க், ஸ்மாலன்ஸ்க், மாஸ்கோ ஆகிய தகர்களிலே, நாற்றமடித்துக் கொண்டிருந்த பிணக் குவியலைக் கொளுத் திக் கொண்டிருந்தார்கள்-142,000 பிணங்கள்!! இந்த அழிவைத் தொடர்ந்து, ரஷியா, பிரஷ்யா, ஆஸ்ட்ரியா, இங்கிலாந்து, ஸ்வீடன், இத்தாலி எனும் நாடு கள் கூட்டுக் கழகம் அமைத்துக் கொண்டு, லிப்சிக் எனும் களத்தில் நெப்போலியன் படைகளை முறியடித்தன. இனி நேச நாட்டுப் படைகள், பாரிஸ் நோக்கிச் செல்ல வேண்டி யதுதான்.