பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 இருபது ஆண்டுகள் இழந்த கீர்த்தியை திரும்பப்பெற ஏதேதோ முயற்சிகள் ஆட்சிமன்ற உறுப்பினர்களிடம் மன்றாடுகிறான்—புள்ளி விவரம் காட்டுகிறான் - புதிய போர்த் திட்டம் கூறுகிறான் -ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். படமுடியாதினித் துயரம்; பட்டதெல்லாம் போதும் என்று கூறிவிடுகிறார்கள்— பட்டம் துறந்துவிடத்தான் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. டோவ்லான், ரிவோன் ஆஸ்ட்டர்லிட்ஸ், ஜீனா - எத் தனை எத்தனை வியப்பூட்டும் வெற்றிகள்! எத்தனை நாடு கள் அடி·ணிந்தன! எத்தனை மன்னர்கள் மண்டியிட்டனர்! அப்படிப்பட்ட நெப்போலியனுக்கு என்ன நிலை நேரிட்டது! 1814-ல் முடி பறிபோகிறது; நாடு நெப்போலியனுடைய பிடியில் இருக்க மறுக்கிறது. பழைய மன்னர் வம்சத்துக்கு அரசாள அழைப்பு செல்கிறது-எல்பா தீவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறான், எதிர்ப்புக்களைக் கண்டதுண்டமாக்கிய மாவீரன். எல்பா தீவு ! ஈட்டியாலும் வேலாலும் குத்தி அடக்கி, வேங்கையைக் கூண்டிலிட்டு வைப்பதுபோல நெப்போலியனை எல்பா தீவிலே சிறை வைத்தனர். ஐரோப்பாவில் பல அரண்டினைகளிலே உலவியவன், எல்பா தீவிலே அடைபட் டுக் கிடக்கிறான். எத்தனை ஆண்டுகளாகப் போரிடுவது! எவ்வளவு இரத் தம் கொட்டுவது! எங்கெங்கிருந்தெல்லாம் பகை மூண்டு விடுவது! போதுமப்பா, போதும்! புகழ் நாடி அழிவினைத் தேடிக் கொண்டது போதும்! இனியேனும், புண்களுக்கு