பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் 189 அளவிலே, வளத்திலே, வரலாற்றுச் சிறப்பிலே, வெவ் வேறு அளவுள்ள அரசுகள் பல இருக்கலாம்-இருக்கின்றன -அவைகளை, வலிவுமிச்சு ஒரு நாடோ வல்லமை மிக்க ஒரு நெப்போலியனோ, தாக்கித் தழுவி, ஒரு பேரரசு காண விரும்பினால், அது சிலகாலம் வெற்றியாகத் தெரியுமே தவிர, இறுதியில் இயற்கை எல்லையும் தேசியமுமே வெற்றி பெறும் என்ற பாடம் கிடைத்திருக்கிறது. கொள்வன கொண்டு, கொடுப்பன கொடுத்து, கூட்டுப் பணியாற்றி, மனிதகுல ஏற்றத்துக்குப் பல நாடுகள் பணி யாற்ற வேண்டுமேயன்றி, அரசு, பேரரசு, வல்லரசு, என் அரசு என்ற கொள்கை கொண்டு போரிடுவது, இரத்தம் பொங்கிடத்தான் வழிகாட்டுமே அல்லாமல், சுவையும் பய வையகம் இவனைப்போல் னும் உள்ள பலனைத் தராது. ஆற்றல் மிக்கவனைக் கண்டதுமில்லை; அவன் நடத்திய இருபதாண்டுப் போரில் பொங்கிய அளவு இரத்தம் எப்போ தும் பொங்கியதுமில்லை. அவனுடைய வீரம் பயனற்றுப் போனதுபோல வேறெதுவும் இல்லை. மாவீரன் நெப்போலி யன் நடாத்திக் காட்டிய வாழ்க்கை, மனித குலத்துக்குக் காலம் காட்டும் ஒரு பயங்கர எச்சரிக்கை. நடமாடும் எரி மலையாக இருந்துவந்தான் நெப்போலியன். தீவிலே பிறந் தான், தீவிலே இறந்தான்! இடையிலே திக்கெட்டும் புகழ் முழக்கினான்—ஆனால் அந்த முழக்கம், நாடு பலவற்றிவே இரத்தம் பொங்கவும், எலும்புக் கூடுகள் நிரம்பிடவும்தான் பயன்பட்டது.