பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

25

"மகனை இழந்த தாய் அவள் ஒருவள் தானா! போர் மூட்டி விடுபவர்கள், அதனால் விளையும் பொல்லாங்குகளை அனுபவிக்கத்தானே வேண்டும்."

ஆஸ்க்கார் பதிலேதும் பேசவில்லை. திரும்பிச் செல்கிறான். சுடச் சுடப் பதில் கொடுத்துவிட்டோ ம் என்ற திருப்தியுடன் அல்லவா மோனா இருக்க வேண்டும்? இல்லையே! போகிறவனைப் பார்த்துக் கொண்டே நிற்கிறாள், தவறாகப் பேசிவிட்டோ ம் என்றெண்ணி வருந்துபவள் போல! சிறிது தூரம் சென்றவன் திரும்பிப் பார்க்கிறான்! மோனாவின் உள்ளம்? தவறு செய்துவிட்டாய் என்று கூறுவதுபோலிருக்கிறது.

மற்றோர் நாள் அந்த ஆஸ்க்கார் ஒரு சிறு பெட்டியைக் கொண்டு வருகிறான். 'இது இறந்துபட்ட லட்விக்கின் தாயார் அனுப்பியது. அவன் கல்லறை மீது தூவும்படி கண்ணாடியாலான இந்த மலரினை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நான் கல்லறை இருக்கும் இடம் செல்ல முடியாது. அதனால், இதனைத் தாங்கள்..."

ஆஸ்க்கார் கெஞ்சும் குரலில் பேசுகிறான்; மோனா கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறாள்; 'என்னால் முடியாது; இதனை எடுத்துக் கொண்டு போய்விடு' என்று. அவன் போய் விடுகிறான்; ஆனால் பெட்டியை அங்கேயே வைத்துவிட்டு!

'கிடக்கட்டும் இங்கேயே, எனக்கென்ன' என்றுதான் மோனா எண்ணிக் கொள்கிறாள். அன்று பகலெல்லாம் அவள் எதிரே கிடக்கிறது அந்தப் பெட்டி! எடுத்து எறியவில்லை! முடியவில்லை! ஆஸ்க்காரின் முகம், அதிலே தெரிந்தது போலும்.

மாலையில் யாருமறியாமல் சென்று லட்விக்கின் கல்லறை மீது அந்தக் கண்ணாடி மலரைத் தூவிவிட்டு வந்து விடுகிறாள்.

மோனா, "ஜெர்மன் இனம் முழுவதும் அழிக்கப்பட வேண்டும், குழந்தை குட்டிகள் உள்பட" என்று கொதித்துக் கூறிடும் கன்னி, ஒரு ஜெர்மானியன் கல்லறை மீது மலர் தூவு-