பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயம் என்று மற்றவன் கேட்டிருக்கக்கூடும். "ஆமாம்! ஒரே அடி யாகச் சாகடித்து என்ன பலன்! இதோ, மன்னன்,விநாடிக்கு விநாடி கொல்லப்படுகிறான்; மறுபடியும் உயிர் தரப்படு கிறது, மீண்டும் கொல்ல! மானமிழந்து, மதிப்பிழந்து, மக்க ளால் இழுத்து வரப்படுகிறான், மன்னன்! இது அல்லவோ. வெற்றி! மகத்தான வெற்றி! நான், மன்னனைக் கொல்லப் பார்த்தேன்! இப்போது மக்கள், மன்னனுக்கு மரண தண் டனை தருகிறார்கள்!! இதுதான் மாபெரும் வெற்றி! என்று அவன் கூறிச் சிரித்திருக்கச் கூடும். 56 மக்கள், என்னென்ன பேசுகிறார்கள் என்று மன்ன னுக்குப் புரியவில்லை! அவனுக்குத்தான் மக்களே, புரிய வில்லையே! என்ன செய்வான், பாவம்!! மகுடாபிஷேகத்தின்போதும் ஊர்வலம்; இப்போதும் ஊர்வலம்! எல்லாவற்றுக்கும் நான்தான். கிடைத்தேன்!- என்று எண்ணிக் கொண்டான், போலும்! பாரிஸ் பட்டினத்தை நோக்கிச் செல்கிறது, ஊர்வலம்! மக்கள் பட்டத்தரசன் தலைநகர் வரவேண்டும் என்று அழைத்தனர்; 'தலைநகரா அது? தலைபோகும் நகரம்!' என்று கூறி, மன்னனை அங்கு செல்லவிடாமல் தடுத்தனர், கொலு மண்டபத்துக் கொடியோர்! மக்களின் கை ஓங் கிற்று! அரசன் இருக்கும் இடம் நோக்கிப் பாய்ந்தது மக்கள் வெள்ளம்! அதிலே சிக்கினான் மன்னன், குடும்பத்துடன்! வெள்ளம், பாரிஸ் நோக்கிப் பாய்கிறது! அதிலே, மிதந்து வருகிறான். மன்னன், உல்லாச ஓடத்தில். அமர்ந்து பழக் கப்பட்டவன்! C பாரிஸ் பட்டினத்து மேயர், மன்னனை வரவேற்கி கிறார். "மன்னரே! தங்கள் வரவு நல்வரவாகுக!" என்று; அவருக்கும் தெரியும்; அனைவரும் அறிவர் அதன் பொருள். "பிடிப்பட்ட பேயனே! இனி நீ எங்கள் கைதி!" என்பதுதான் என்று. மன்னனும், உணர்ந்திருக்கிறான், "கைதியாக்கி விட்டீர்கள். இனி, என் கதி, உங்கள் தீர்ப்பைப் பொறுத்து இருக்கிறது” என்று. ஆயினும், சம்பிரதாயத்துக்காக மன்னன் பேசுகிறான்.