பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பானால் 57 "மகிழ்ச்சியுடன் வருகிறேன்; மக்களிடம் நம்பிக்கை வைத்து வருகிறேன்" என்று அரசன் கூற, மேயர் அதை மக் களுக்கு அறிவிக்கிறான். அறிவிக்கும்போது, மக்களிடம் நம் பிக்கை வைத்து' என்ற வார்த்தைகளையே, சொல்லாமல் விட்டுவிடுவது கண்ட, இராணி நினைவுபடுத்துகிறாள், 'நம் பிக்கையுடன்' என்ற வார்த்தையைக் கூறும்படி! அரசனை எந்த அளவுக்கு அச்சம் பிடித்தாட்டிற்று என்பது இதிலிருந்து நன்கு தெரிகிறதல்லவா. 'அழைத்தீர்களே என்று வந்திருக்கிறேன். முடியாது என்று கூறிடும்; ஆற்றலை இழந்துவிட்டேன்; வந்திருக்கிறேன். இழுத்து வந்தீர்கள்-- இங்கு நிற்கிறேன். எனக்குக் கெடுதி எதுவும் செய்யாதீர்கள். கெஞ்சுகிறேன். கெடுதி செய்யமாட் டீர்கள் என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன். திக்கற்றவன்! வலிவிழந்தவன்!உங்கள் மன்னன் உங்களி டம் தஞ்சம் புகுந்து விட்டேன்!" என்றெல்லாம், விளக்கமா கப் பேச நேரமில்லை, பேசிப் பழக்கமில்லை! எனவேதான், மன்னன், சுருக்கமாகக் கூறினான், 'நம்பிக்கையுடன் வந்திருக் கிறேன் என்று. அந்த மக்கள், எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள், மன்னனிடம்! மகேசன் அருள் அவனை மன்னனாக்கிற்று! அவனுக்கு அடங்குவது ஆண்டவனுக்கு அடங்குவதாகும்! மன்னன், நாடு வாழ நல்லாட்சி செய்வான்; மக்கள் வாழ்வே என் மகிழ்ச்சி என்று எண்ணுவான். வெளிப்பகையும், உள் நாட்டிலே பசியும் பிணியும் தாக்காமல் பாதுகாப்பு அளிப் பான்!- என்றெல்லாம் நம்பினர்! மக்களின் நம்பிக்கையை நாசமாக்கிவிட்டான் மன்னன்! இப்போது மக்களிடம் மன்றாடுகிறான். 'உங்களிடம் நம் பிக்கை வைத்துத்தான் வந்திருக்கிறேன்' என்று. "ரொட்டி கேட்டோம்; இவன் படை விரட்டி அடித் தது! கருணை கேட்டோம், கசைஅடி கொடுத்தனர். இந்தப் பாவம் சும்மா விடாதய்யா என்று பேசினர். 'பாஸ்ட்டிலி