பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இதயம் சிறையில் தள்ளினர், அதிகாரிகள்! இப்போது, நம்மிடம் நம்பிக்கை வைத்து வந்திருக்கிறாராம்,இந்த நல்லவர்! எப்படி இருக்கிறது, வேடிக்கை!! என்று அல்லவா, மக்கள் கேலி பேசியிருப்பர். பஞ்சம் தாக்கிற்று மக்களை; பவனி நடத்துகிறார்கள்! அதிலே, மன்னன் மட்டுமல்ல, அவன் இருந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட, 'ஐம்பது வண்டி தானியங்கள்' உடன்கொண்டு வரப்பட்டன. தங்கமும், தந்தமும், பரியும் கரியும், முத்தும் அங்கியும் பவளமாலையும் - இப்படிப் பொருள்கள் கொண்டு வருவர்; வெற்றிபெற்ற படையினர், வேற்று நாட்டிலிருந்து. இங்கு, அரண்மனையை நோக்கிக் கிளம்பிய படை ஐம்பது வண்டி தானியத்தைக் கொண்டு வருகிறது! அன் நாடு இருந்த நிலையை ஆத்திரம் மட்டுமன்றி, அறிவும் ததும்பிய உள்ளத்தினன் ஒருவன் எடுத்து விளக்கி னான். 'நண்பர்களே! தைரியமாக இருங்கள்! ரொட்டி! ரொட்டி! என்று ஏங்கித் தவிக்காதீர்கள்! இனி ரொட்டிக்குப் பஞ்சமில்லை!' மக்களுக்கு மகிழ்ச்சி! அவர்கள், ஆட்சி முறை மாற வேண்டுமென்று விரும்பக் காரணமேகூட அரசியல் முறை களுக்கான தத்துவ ஆராய்ச்சி அல்ல; அந்த ஆட்சிமுறையால், அவர்களைப் பட்டினி வாட்டியது! அதுதான் காரணம். ஆகவே, இனி 'ரொட்டிக்குப் பஞ்சம் இல்லை!' என்று தமது நண்பனொருவன் கூறக்கேட்டதும் மகிழ்ச்சி பிறந்தது. மறுகணம், கவலை குடைந்தது. 'ஐம்பது வண்டி கோதுமை, எத்தனை நாளைக்குக் காணும்! இவன், இனி ரொட்டிக்குப் பஞ்சம் இல்வை என்கிறானே! எப்படி?' என்று எண்ணித் திகைத்தனர். அவர்களின் திகைப்பை அறிந்தவன்போல அவன் தொடர்ந்து பேசினான்.