பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பானால் "ரொட்டிக்கு இனிப் பஞ்சம் இல்லை. ஏனெனில், இதோ ரொட்டி சுடுபவன், ரொட்டிக்காரன் மனைவி, ரொட் டிக்காரன் பிள்ளை, இவர்களை அழைத்துக் கொண்டு வந்துவிட்டோம்.” எல்லா ஒலியையும் மீறி அல்லவா, கை ஒலி கிளம்பி இருக்கும். அவன் பேச்சு கேட்டு. ஆணவம் கலந்த கேலிப்பேச்சா அது! 59 எல்லாம் கேலி இருந்தது; ஆணவம் கூடத்தான்! ஆனால், அது மட்டுமல்ல, அதன் ஊடே மறுக்கமுடியாத ஒரு அரசியல் தத்துவமும் இருந்தது. அரசன் கடமை. மக்களுக்கு உண வளிக்கவேண்டியது; வாழ வைக்க வேண்டியது; அதற்குத் தான் அரசன்! அதைச் செய்யத் தவறினால், கேட்க, தண் டிக்க, நீக்க, ஒழிக்க, மக்களுக்கு அதிகாரம் உண்டு!- என்ற ரூசோ போன்ற அரசியல் அறிவாளிகளின் ஆழ்ந்த கருத் துகள் அவ்வளவும், அந்தக் கேலிப்பேச்சிலே குழைத்து இருந் தது. 1789ம் ஆண்டு, அக்டோபர் திங்கள், ஆறாம் நாள், நடைபெற்றது, அந்த அரிய ஊர்வலம். மன்னன் புதிய இடம் வந்தான்! மக்கள் புதிய பலம் பெற்றனர். அன்று, இரவு பதினொரு மணி ஆகிவிட்டதாம், அரச குடும்பம், மாடி செல்ல! வழிகாட்ட, தீப்பந்தம் பிடித்து நின்றனர், படையினர்! தீப்பந்தம்! வழிகாட்டவும் உதவும்; கொளுத்தவும் பயன்படும். மன்னன் தலையில் சிகப்புத் தொப்பி! அந்தத் தொப்பி யில் மக்கள் தயாரித்த கொடிச் சின்னம்! தனர். மக்கள் சொந்த உடையைப் பறித்துக் கொண்டு, சிறை உடை கொடுத்துக் கைதிகளை உள்ளே தள்ளிப் பூட்டுகிறார்களில் லவா! மன்னன், மாடி சென்றான்; மக்கள் களிநடம் புரிந்