பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

இதயம்


'இது சிறைதானே!'என்று எண்ணினான் மன்னன்;'இவன் நமது கைதிதானே' என்று எக்காளமிட்டனர் மக்கள்'துலியர்ஸ் அரண்மனை' என்ற பெயருடைய, அந்தக் கட்டிடம் கற்களாலானவை! அவை என்ன பேசும்?

இனி வரப்போகும் பயங்கரத்தை அறிவிப்பது போல. அரச குடும்பம்,நடந்தபோது, எழுந்த காலடிச் சத்தம் இருந்திருக்கும்.

வரலாற்றுச் சுவடியிலே, காலம் ஒரு புதிய வரியைச் சேர்த்தது, 'மக்கள் கொதித்தெழுந்தால், மன்னன் சிறைப் படுவான்' என்று.

அதுதானா, கடைசி வரி? இல்லை! மேலும் எழுதக் காலம் துடித்துக் கொண்டிருந்தது. 'இது எங்கள் காலம்!'என்று எக்காளமிட்டபடி, மக்கள் திரள் திரளாக, பாரிஸ் பட்டினத்தில் உலவி வந்தனர்.

இழந்ததை எண்ணிய திகைப்பு, அரச குடும்பத்துக்கு; தூக்கம் வரவில்லை!

பெற்ற புதிய வெற்றியை எண்ணும்போது கட்டுக்கடங் காத களிப்பு மக்களுக்கு; அவர்களுக்கும் தூக்கம் வரவில்லை!

வேதனையும் வெட்கமும் அதிகப்படும் என்ற பயத் தால், அரச குடும்பத்தினர், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூசினர்.

ஒருவருக்கொருவர் பேசிப்பேசி, களிப்பைப் பன்மடங்கு. பெருக்கி மகிழ்ந்தனர், மக்கள்.

பாறையின் இடுக்கில், அடிபட்ட கருநாகம், ஊர்த்து கிடக்கிறது.

கடலலை, பாறைமீது பாய்கிறது; திவலைகள், பதுங்கிக் கிடக்கும் பாம்பின்மீது விழுகின்றன.

எந்த நேரத்திலும், அலையின் அளவும் வேசுமும் அதி கரிக்கக் கூடும்; பாம்பு, அடித்துக் கொண்டு போகப்படக் கூடும்.

இந்த நேரத்துக்கு, இந்த இடம் என்ற அளவிலே, பாம்பு பதுங்கி இருக்கிறது.

அடிபட்டதால் ஏற்பட்ட வலி, சீறிடக்கூட வலிவு இல்லை; மூச்சு சற்றுப் பலமாக இருக்கிறது.