பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்பானால்

61


அன்றைய நிலைமை அது போன்றதே! ஆனால் ஒரு வித்தியாசம். பாம்பு பதுங்கி இருக்கும் இடம் அலைக்குத் தெரிய முடியாது; ஆனால் மக்கள் நன்றாக அறிவார்கள்.மன்னன் இருக்கும் இடம், நிலை இரண்டையும்!பாரிஸ் பட்டினத்தோரே! அறிவிழந்த பாரிஸ் பட்டினத் தோரே! மன்னனையும் அவன் மகனையும் உங்கள் கோட்டைக். குள்ளேயேகாவல் வையுங்கள் என்று சொல்லிச்சொல்லி அலுத்துப் போய்விட்டது. அரச குடும்பம், தப்பித்துக் கொண்டோ டத் திட்டமிட்டிருக்கிறது. மந்த மதியினரே! அதை அறியாமல் உறங்கிக் கிடக்கிறீர், திறமையாகக் காவலிருங்கள்!அந்த ஆஸ்ட்டிரியா நாட்டவளை, அவள் மைத்துனனை,மக்களை, குடும்பத்தை, அரண்மனையில் அடைத்துப் பூட்டி.வையுங்கள். தவறினால், இலட்சக்கணக்கான பிரான்சுக் குடிமக்களுக்குக் கல்லறை தோண்டியவர்களாவீர்கள் எச்சரிக்கிறேன்! ஏமாளித்தனத்தால், எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள்! மன்னன் தப்பி ஓட முயற்சிக்கிறான். திட்டம் தயாராகிவிட்டது!

"மக்கள் நண்பன்" என்ற இதழில், மாராட் எனும் மக்கட் தலைவன், இவ்விதம் எழுதினான்.

படித்தனர்; பதைத்தனர்; பயந்தனர். ஆமாம்! அரசன் தப்பிச் சென்றுவிட்டால் அழிவு அல்லவா நமக்கு! ஐரோப்பாவில் உள்ள பல அரசுகளும், அவன் கண்ணீர் கண்டு, படையுடன் வருவார்களே, இங்கு. எப்படி நாம் தடுத்து நிறுத்த முடியும் என்று எண்ணினர்.அச்சம் மனதை வாட்டலாயிற்று.

"தப்பி ஓடலா? திட்டமா! யார்? மன்னனா? பைத்யம், பைத்யம்! விழித்த கண் மூடாமல் காவல் புரிகிறார்கள், தெரியுமா? இதற்கென்றே, ஒரு தேர்ச்சிபெற்ற படை இருக்கிறது. கீர்த்திமிக்க தலைவன் இருக்கிறான். அரசு குடும்பத்தில் ஒவ்வொரு நடவடிக்கையையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும், கூர்மையான கண்கள், பலப்பல நூறு!ஒருதுளி சந்தேகம் ஏற்பட்டாலும், மிகக் கூர்மையான வாட்களை உருவிக் கொண்டு தாக்கக் கிளம்பத் தயாராக உள்ள