பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயம் வர்கள் ஆயிரவருக்குமேல்! மன்னனாவது தப்பி ஓடுவதாவது! நடைபெறாது நண்பர்களே! ஒருநாளும் நடைபெறாது." என்று சிலர் பேசினர். 62 ஆனால், எச்சரிக்கையாக இருக்கும்படி எழுதியவர், மாராட்! மக்கள் எப்படிப் பொருட்படுத்தாமலிருப்பர்? மக்க ளின் நல்வாழ்வுக்காக எதையும் அழிக்கலாம் என்று துணிந்து பேசியும் எழுதியும் வந்த மாராட், தெளிவு அதிகம் பெறமுடி யாத மக்கள் இடையிலே அளவற்ற செல்வாக்கு பெற்றிருந் தான். கொடியோரைக் கொன்று குவித்தால் என்ன தவறு? அவர்களைக் கொல்லாது விட்டாலோ, அவர்கள் ஏழை எளி யோரைக் கொன்று குவிப்பார்கள்!-என்று பேசுவதும் எழுது வதும், மாராட்டின் வாடிக்கை. சுவிட்சர்லந்திலே, ஒரு மருத்துவருக்கு மகனாகப் பிறந்த மாராட், பிரான்சிலே, மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு மன்னரின் காவற்படையின் மருத்துவனாகப் பணியாற்றிப் புரட்சி இயக்கத்துக்காகத் தொழிலை விட்டு விட்டுப் பொறி எனக் கிளம்பி, பெரு நெருப்பாக மாறிவிட்டவன். இரத் தத்தைக் கண்டு அஞ்சாதவர்களும் மாராட் பேசுவது இரத்த வெறி ஊட்டுகிறது என்று கூறி அருவருப்படைவார்கள்! ஆனால் ஏழைகளோ, எங்கள் சார்பாக, துளியும் தயக்கமின் றிப் பேச மாராட் தவிர வேறு யார் இருக்கிறார்கள் என்று புகழ்ந்து கூறுவர். ஆதிக்கக்காரர்களை மட்டுமல்ல, அரசியல். விரோதிகளையும் அழித்தொழிப்பதிலே, மாராட் தயக்கம் சிக்கிக் காட்டியதில்லை. அதுபோன்றே ஆபத்துக்களில் கொண்டபோது சாகசம் பல செய்து தப்பித்துக் கொள்வதி லும் திறமைமிக்கவனாக இருந்தான். இத்தனைக்கும் நோய் அவனை வாட்டியபடி இருந்தது. அவனே பிரான்சைப் பிடித்துக் கொண்டுள்ள ஒரு நோய்தானே!--என்று அவனை அருவருத்தோர் கூறினர். ஆனால் எதிரே அவனைக் கண்டால் அஞ்சுவர். காரணம் எண்ணற்ற மக்கள் அவனிடம் அளவற்ற பற்று வைத்திருந் தனர்.