பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 இரும்பானால் எனவே, மன்னன் தப்பி ஓடத் திட்டமிட்டிருக்கிறான் என்று மாராட் எழுதியதும், அந்தச் செய்தி, காட்டுத் தீயெனப் பரவிற்று. மற்ற யாரும் கண்டறியா முன்., மாராட், இதைக் கண்டறிந்து கூறியது, அவனுடைய திறமைக்கு ஒரு சான் றாகிவிட்டது. மன்னன் நடத்தத் திட்டமிட்ட 'சதி'மாராட் டுக்குத் தெரிய நேரிடச் செய்ததும், ஒரு விசித்திரமான நிகழ்ச்சியினால்தான். மாராட் நடத்தி வந்த 'மக்கள் நண்பன்' என்ற இத ழுக்கு, செய்திகள் திரட்டித் தருபவர்களில், ஜாவார்தின் என்பவனும் ஒருவன். புரட்சி இயக்க ஏட்டுக்குப் பணியாற் றிக் கொண்டிருந்ததோடு, இவன் ஓர் காதலியையும் பெற்றி ருந்தான். மாளிகைக்காரர் பலரை வாடிக்கைக்காரராகப் பெற்றுத் துணி வெளுக்கும் தொழில் நடத்தி வந்தவள். இவன் காதலி. மாளிகையிலே இருந்து அனுப்பப்பட்ட சட்டை ஒன்றில் நைந்த நிலையில் ஒரு கடிதம் இருந்திடக் கண்டு, படித்துப் பார்த்தாள் அந்தப் பெண். கடிதத்தில், 'அனுமதிச் சீட்டு கள் தயாராகிவிட்டன. வண்டிகள் ஏற்பாடாகிவிட்டன என்று எழுதப்பட்டிருந்தது. ஜாவார்தீனிடம் இந்தக் கடி தத்தைக் கொடுத்தாள்; மாராட்டிடம் அவன் தந்தான். தீப்பொறி பறக்கி, மாராட் இதழில் எழுதினான்; மக்கள் பதைத்தெழுந்தனர். என்ன செய்கிறது காவற்படை? என்ன செய்கிறான் காவற்படைத் தலைவன் லாபாட்டி என்று முழக்கமிட்டனர். பாரிஸ் பட்டினம் முழுதும் இதே பேச் சாகிவிட்டது. வெறும் வதந்தியுமல்ல இது; உண்மையில் மன்னன் தப்பி ஓடத் திட்டமிட்டிருந்தான். மன்னன் இருந்துவந்த இடத்தை ஆறு நூறு வீரர்கள் கண்காணித்து நின்றனர். உள்ளே, எப்பக்கம் திரும்பினா லும், துப்பாக்கி ஏந்திய வீரர்கள்! மன்னன் அறைக்கும் இராணியின் அறைக்கும் இடையே உள்ள தாழ்வாரத்தில்