பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயம் கூடக் காவல்!அரச குடும்பத்தினர் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளக்கூடப் பயந்தனர்- அவ்வளவு கண்டிப்பு, காவல்! ஆயினும், இவ்வளவுக்கும் இடையே, அரச குடும்பத்தார், தப்பித்துக் கொண்டு போய்விடத் திட்டம் தயாரித்திட முடிந்தது. 64 மன்னன் ஆட்சி இருந்தால் மட்டுமே, தமக்குச் 'சுக போக' வாழ்வு உண்டு என்பதால், பதுங்கிக் கிடந்த பிரபுக் களில் சிலரும், ஜெபமாலை காட்டி மக்களை மயக்கித் திரிந்த மதத் தலைவர் சிலரும். மன்னன் தப்பி ஓட வழிவகுத்துக் கொண்டிருந்தனர். மன்னன் வெளிநாடு சென்றால், படை திரட்டுவான்; படை வந்தால் புரட்சியை ஒழித்துக் கட்ட லாம் - பிறகு... பிறகா! மது, மங்கை, மகிழ்ச்சி-என்று அவர்கட்கு எண்ணம். லூயி மன்னன் ஆட்சி நடத்த வேண்டுமா? அல்லது விலக்கப்படவேண்டுமா? மக்களின் நல்வாழ்வுக்கான முறை யில் சட்டதிட்டம் தீட்டப்பட்டு அதற்கு அடங்கி மன்னன் நடந்து கொள்வதாக இசைவு தந்தால் ஆள அனுமதிக்க லாமா? ஏன் மன்னராட்சி முறை இருக்க வேண்டும்—-அதைக் கட்டுப் படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் ஓயாமல் மக்கள் கண் விழிப்பாக இருக்க வேண்டுமா? ஏன் இந்த வீண் தொல்லை? முறையையே மாற்றிவிட்டால் என்ன? பலர் பல்வேறு கோணங்களிலிருந்து, பிரச்சினையை ஆராயத் தலைப்பட்டனர்; விவாதம் வலுவாகிக்கொண்டு வந்தது. அரசியல் சட்டம், என்னென்ன உரிமைகளை மக்கள் பெறத்தக்கதாக அமைய வேண்டும் என்பது பற்றியும் பேச்சுப்புயல் வீசிக்கொண்டிருந்தது. 'ஆளப்பிறந்தவன்' என்ற விருதுகொண்டவன் அரண் மனையில் இருந்துவர அனுமதி அளித்த மக்கள், ஆட்சிமுறை எப்படி இருப்பது என்பதைப் பேசி வகுத்துக் கொள்ளலாம்; பிறகு, மன்னனைப் பற்றிய பிரச்சினை எளிதாகிவிடும் என்று எண்ணினர்.