பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பானால் 65 பிரான்சு எப்படி. ஆளப்பட வேண்டும் என்பது பற்றி மட்டுமல்ல, வெளிநாட்டவரின் பகையையும் தாக்குதலையும் எவ்விதம் எதிர்த்து நின்று வெற்றி காண்பது என்பது பற்றி யும், மக்கட் தலைவர்கள், கவனிக்க வேண்டி வந்தது. "நாம் அறிவிக்கிறோம் என்று மன்னன் முறையில், மக்கட் தலைவர்கள், எவரும் பேச முடியாதல்லவா! கருத்துக்கான காரணங்களை விளக்க வேண்டும், கேள்வி களுக்குப் பதிலளிக்க வேண்டும், ஐயப்பாடுகளைப் போக்க வேண்டும், மறுப்புக்களுக்கும் எதிர்ப்புக்களுக்கும் பதிலளிக்க வேண்டும், ஏளனத்தைக் கேட்டு எரிச்சலடையக்கூ..ாது. எதிரிகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது?-- இப்படி எத் தனை எத்தனையோ உள்ளனவே முறைகள்! காலம் வேண் டும் அதற்கு! நெஞ்சில் உரமும் தெளிவும் வேண்டும்! நேசங் கள் முறிந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கண்ட தற்கெல்லாம் கடுமையான மொழியால், எதிர்ப்புக் கூறிக் கொண்டே இருப்போம், கேட்டுக் கேட்டு மனம் வெதும்பித் தானாக ஓடிவிடட்டும். பிறகு விரட்டிவிட்டோம் என்ற மனத்திருப்தி பெறுவோம் என்ற போக்கினர் இருப்பர்; நிலைமையை அறிந்து நடந்து கொள்ளவேண்டும். எது கவனிக்கப்பட வேண்டியது? மனதுக்குச் சரி என்று பட்ட திட் டமா? அல்லது மனதை நோகச் செய்யும் போக்குடையாரு டன் கூடிக் காரியமாற்றல் இயலுமா, இயலாதா என்ற பிரச் னையைத் தீர்த்துக் கொள்வதா? எது முக்கியம்-என் பதைத் தீர்மானிக்கவேண்டும். இப்படி எத்தனையோ சிக்கல் கள், மக்கள் மன்றத்தில் அமர்ந்து, புதிய திட்டம் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு. கவிழ்க்கப்படுவதற்கு முன்பு வரையில் மன்னனுக்கு எல்லா மக்களிலும் தான் மேம்பட்டவன் என்ற அழுத்தமான நம்பிக்கை இருக்கிறது; மக்களில் பெரும்பாலாருக்கும் அந் தப் பயம் இருக்கிறது. மக்கட் தலைவர்கள் விஷயம் அப்படி அல்ல! இவன் எப்படித் தலைவனானான்? எனக்குத் தெரி யாதா!- என்று ஆணவம் கக்கி நிற்போரும், 'இவனெல்லாம் பூ-162-இ-3