பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 இதயம் தலைவனாம்!' என்று ஏளனம் பேசுவோரும், "இவனை ஒழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன்' என்று சூளுரைப் போரும் மக்கள் மன்றங்களிலே இருப்பர்! 'என்னால்தான் எல்லாம் ஆகும்! எனக்குத்தான் எதுவும் தெரியும்! என்னைத்தான் எவரும் நம்புவர்! எனக்கு மட் டுமே எல்லா ஆற்றலும் உண்டு'--என்ற எண்ணத்தை நோயளவுக்கு முற்றவைத்துக் கொண்டவர்கள் இருந்திடுவர். சமரச நோக்கம் சாகசமாகவும், கூடிப் பணியாற்ற வேண்டும் என்ற போக்கு ஒட்டிக் கொள்ளும் வித்தை என்றும் பொறுமை சொரணை கெட்ட தன்மை என்றும் திரித்துக் கூறப்படும். இங்கிருந்து அங்கு செல்ல வேண்டும்- என்ற ஆசை எழக்கூடும். இடம் பிடிக்கு யல்பும், இன்னொருவருக்கு இட மளிக்க மனமில்லாத தன்மையும் ஏற்பட்டுவிடக் கூடும். இவருடன் கூடினால் இது கிடைக்கும், அவரை ஒழித் தால், இவருக்கு நம்மிடம் பற்று ஏற்படும் என்ற கணக்குகள் போட வைக்கும். அப்பப்பா! எத்தனை 'ஆபாசங்கள்' எழும், எத்துணை எண்ணங்கள் கிளம்பும், என்னென்ன வகையான எரிச்சல் கள் மூட்டப்படக்கூடும்!-மக்கட் தலைவர்கட்கிடையில்! இவை யாவும், எழுச்சி பெற்ற பிரான்சிலே, மக்கள் மன்றத்திலே, தலைவிரித்தாட ஆரம்பித்தன. இவை தவிர்க்க முடியாதவை என்ற போதிலும், பிரான்சிலே,மிக அதிகமான அளவு தோன்றி, நாட்டை அலைக் கழித்தன என்பதை எவரும் மறுக்க முடியாது. மன்னனின் கொட்டம் அடக்கப்பட்டதும்,சீமான்களின் ஆணவம் தகர்க்கப்பட்டதும், மதப்போர்வைக்குள் இருந்து வந்த மதோன்மத்தர்களின் மமதை மட்டந்தட்டப்பட்ட தும், என்னால்தான், என் முறையினால்தான் பெருமை பேசி,உரிமை கொண்டாடிக் கட்சி கட்டினர் பலரும். என்று