பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" இரும்பானால் 67 'என்னால்தான், எனது முறையினால்தான் என்ற பேச்சு வளர்ந்து வளர்ந்து, இனியும் என் முறைப்படி நாடு நடத்தப்பட்டால் மட்டுமே நலன் கிடைக்கும்; மற்ற முறை அவ்வளவும் நாசமே ஏற்படுத்தும்' என்று கூறிடவும், அந்தக் காரணம் காட்டி நாடாளும் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள் என்று கேட்கும் போக்கும் கொக்கரித்தது. மன்னன் மனம் மகிழும்படி நடந்துகொண்டு, பட்ட மும் பதவியும் பெற்றனர், பலர் முன்பு. மக்கள் மன்றத்திலும், இதே போன்றார் கிளம்பினர்! பொறிபறக்கப் பேசுவதாலும், தீவிர திட்டங்களைத் தீட்டு வதாலும், செல்வாக்குப் பெற முயற்சித்தனர். அதற்காகப் பலர், சிறுசிறு முகாம் அமைத்துக் கொண்டனர். முகாமுக்கு முகாம் சண்டை! முகாமுக்குள்ளாகவே சண்டை!! வெட்டு, குத்து ஏராளம்! வீண்கலாம் அதிக அளவில்! மந்தமதியும், எதையும் சாதிக்கத் தெரியாத போக்கும் கொண்டவனாக மன்னன் பதினாறாம் லூயி இருந்ததால், விபரீதம் ஏற்படவில்லை. தருணமறிந்து வேலை துவக்கக் கூடிய தந்திரக்காரன், மன்னனாக இருந்திருப்பின், மக்கட் தலைவர்களுக்குள்ளே கிளம்பிவிட்ட, வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும், தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஆதிக்கத்தைக் கைப்பற்றி இருந்திருப்பான். ஒரு கட்சி மீது மற்றோர் கட்சியை ஏவி விட்டும், கட்சிக்குள்ளேயே, சிண்டு முடிந்துவிட்டும், தனக்கு வலிவு தேடிக் கொண்டிருப்பான். பதினாறாம் லூயி, அப்படிப்பட்ட மன்னனல்ல. எப்படித் தப்பித்துக் கொண்டு ஓடிவிடலாம்? எந் தெந்த மன்னர்கள், உதவி செய்ய வருவர்?- என்ற இவை பற்றியே, எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். அரசியோ. "இந்த நாட்டு எல்லையைக் கடந்தால், எல்லாத் தொல்லை யும் ஒழிந்துபோகும். பழி தீர்த்துக் கொள்ள முடியும். படுகுழி வெட்டிப் புரட்சி செய்த புல்லர்களைப் போட்டுப் புதைத் திட முடியும். மன்னனை எதிர்க்கும் துணிவு, என்றென்றும் ஏற்படமுடியாதபடி, "பயங்கர" முறைகளைக் கையாண்டு,