பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 இரும்பானால் ஸ்வீடன் நாட்டுச் சீமான் மகன், வண்டியோட்டியாக வடிவம் பூண்டான். மன்னனோ, பணியாள்! அரசி, தோழி! தோழி, சீமாட்டி வேடத்தில்! இப்படி ஏற்பாடுகள்! அரச குடும்பத்தார் அந்தச் சமயத்திலும், தமது அட்ட காச' போக்கை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. வெளியே சென்றதும், அந்தஸ்துக்கு ஏற்ற உடை வேண்டுமே என் றாள், அரசி,பணிப்பெண் சென்று, பல கடைகளிலே, விலையுயர்ந்த ஆடைகளாக வாங்கினாள், மிக அதிகமான அளவு. கடைக்காரருக்கே சந்தேகம். தப்பிப் பிழைத்தோடும் வேளையிலும், 'தர்பார்முறை’ கெடக்கூடாதாம்! அதனால் பல ஏற்பாடுகளைச் செய்து முடிக்க வேண்டி வந்தது. நேரம் வீணாக்கப்பட்டது. கடைசியில், காவலர்கள் கவனிக்காமல் விட்டிருந்த பக்கமாக, வெளி ஏறினர். ஸ்வீடன் நாட்டுச் சீமான் மகனல்லவா, வண்டி ஓட்டுகிறான்! அவனுக்கு, பாரீஸ் பட்டினத்துப் பாதைகள் சரியாகத் தெரியவில்லை; சுற்றிச்சுற்றி வருகிறது வண்டி. அரசகுடும்பம் அறியுமா, தலைநகரின் வீதிகளை. இல்லை! தோழிகள்? அவர்கட்கு மட்டுமென்ன? அரண்மனை தெரியும், அலங்காரச் கடை தெரியும், நாட்டிய அரங்கம் தெரியும், பூந்தோட்டம் தெரியும், மற்ற இடம் தெரியாதே! ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து வளரும் நேரம்! வழி தெரியாமல் திண்டாடுகிறார்கள், அரச குடும் பத்தார். கடைசியில், ஒரு காவலாளியைக் கேட்டு வழி தெரிந்து கொண்டனர். வண்டி கிளம்பிற்று. பாரிஸ் பட்டி னத்தைக் கடந்தாயிற்று. பொழுது புலர்ந்தது; விஷயம் வெளிவந்தது. தப்பி விட்டார்கள்! ஓடி விட்டார்கள்! காவலிருந்தோர் ஏமாந் தனர்! கண்ணில் மண்ணைத் தூளிவிட்டு ஓடிவிட்டனர். சூது சூழ்ச்சி செய்ய மாட்டேன்,சதி ஏதும் புரியமாட்டேன் என்று ஆயிரம் சத்தியம் செய்தான், அரசப் பதவியில் உள்ள அந்த அற்பன்! ஓடிவிட்டானே இப்படி-என்று மக்கள் கூறிக் கொதித்தனர். தேடலாயினர், ஓடலாயினர். அரச குடும்பமோ, வேறோர் ஊர்ப் போய்ச் சேர்ந்தது!