பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தயம் பாரிஸ் அல்லோலகல்லோலப் படுகிறது! மாறு வேட மணிந்த மன்னன், தன் குடும்பத்துடன் வருகிறான், வேறு நகருக்குள். அந்த ஊர், அஞ்சல் நிலைய அலுவலரின் மகன், அரசனை அடையாளம் கண்டு கொண்டான். யார் நீ ! எடு, அனுமதிச் சீட்டு! அவன் கேட்கிறான். அந்த நேரத்தில், அஞ்சா நெஞ்சம் காட்டவோ,ஆற்ற லுடன் காரியமாற்றவோ, இயலவில்லை மன்னனால்! எந்த நேரத்தில்தான் முடிந்தது, பாவம்! இளித்தான்; விழித் தான்; குளறினான்! 'சரி! இனிப் பயன் இல்லை. நாங்கள்தான். எங்கு போக வேண்டும், வழி காட்டு" என்று மன்னன் கூறி விட் டான். பலநாள் பாடுபட்டுத் தீட்டிய திட்டம், நொடிப்பொழு தில் பொடிப் பொடியாகி விட்டது. அரசியின் உள்ளம் எப்படி இருந்திருக்கும்! மன்னன், அதிகமாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதிகாரியின் வீட்டு மாடிக்கு மன்னனை அழைத்துச் சென்றனர்; சென்றதும், மன்னன் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னான்! ரொட்டியும் வெண்ணெயும் தந்தான் அதிகாரி. பருக, பர்கண்டி திராட்சை ரசச்சாரா யம் கொடுத்தான். மன்னன், அதைப் பருகி மகிழ்ந்து, 'இவ் வளவு நல்ல, பர்கண்டி பானத்தை நான் இதற்கு முன் பருகினதில்லை!'--என்று கூறிக் களித்தானாம். அரச குடும்பத்தின் இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று, பாரிசில் மக்கள் கொக்கரிக்கிறார்கள்; இங்கு மன்னன் பர்கண்டி பானம் அருந்தி மகிழ்கிறான். தன்னைப் பற்றிய கவலை துளியும் அற்ற போக்கா, அது? அதுகூட அல்ல, நிலைமை நமது சக்திக்கு மீறிச் சென்றுவிட்டது. இனி அதைப் பற்றிச் சிந்தித்து என்ன பயன்? ஏன், சிந்தித்துச் சிரமப்பட வேண்டும் என்ற நினைப்பு. அவ்வளவு சுறுசுறுப்பான இயல்பு!