பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பானால் பிடிப்பட்டு விட்டான் மன்னன்?'- என்ற செய்தி பாரி சுக்கு எட்டிற்று. மட்டற்ற மகிழ்ச்சி மக்களுக்கு. படைகள் கிளம்பின, அரச குடும்பத்தை, மீண்டும் பாரிஸ் பட்டணம் அழைத்துக் கொண்டுவர. முன்பு நடந்த ஊர்வலத்தில் மன்னன் கைதியாக அல்ல, மன்னனாகவே அழைத்து வரப்பட்டான். இம்முறையோ, மன்னன் 'கைதி' ஆக்கப்பட்டு, கட்டுக் காவலுடன் அழைத்து வரப்பட்டான். மன்னன் அமர்ந்திருந்த வண்டியிலேயே, காவல் அதி காரியும் ஆயுதத்துடன். 71 அடக்க முடியாத துக்கம் கொண்ட நிலையில், அரசி. சூழ மக்களும் படையும்! இப்புறம் அப்புறம் திரும்பிக் கூட வேடிக்கை பார்க்காமல், இமை கொட்டாது, அரசன் இருந்த வண்டியைப் பார்த்தபடி முழக்சுமும் இல்லை; மகிழ்ச்சியும் இல்லை. பயங்கரமான ஒலியற்ற சூழ்நிலை. ... வழிநெடுக மக்கள் பார்க்கிறார்கள்!கண்களிலே நெருப்பு மில்லை; நீரும் இல்லை! மன்னனை ஏசுவோர் தாக்கப்படுவர். மன்னனைப் புகழுவோர் கொல்லப்படுவர்!' என்று எழுதப்பட்ட அட்டை கள் பாரிசில் எங்கும் காணப்பட்டன. எனவே, மக்கள் வாய் மூடிக் கண்திறந்து நின்றனர்! அரச குடும்பம், கண்களையும் மூடிக் கொண்டுதான் இருந்திருக்கும். கைது செய்யப்பட்ட அரச குடும்பம், பாரிஸ் வந்ததும் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர். பிரான்சுக்கு முன்பு மன்னன் இருந்தான்! அவனை என்ன செய்வது என்று மக்கள் மன்றத்தில் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். இப்போது பிரான்சுக்கு மன்னன் இல்லை ; இருப்பது 'கைது்’--என்ன தண்டனை தருவது என்று மக்கள் பேசுகிறார்கள்.