பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயம் தப்பிச் சென்று, வெளிநாட்டு உதவியுடன் நுழைந்து மக்களை வெட்டி வீழ்த்தத் திட்டமிட்ட அரச குடும்பம் 'இடுகாடு' செல்லும் போதாகிலும் துக்ககீதம் பாடப்படும். அதுவுமின்றிப் பாழ்வெளியின் அமைதி போன்றதோர் நிலை யில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுச் சிறையில் தள்ளப் பட்டனர். தப்பி ஓடியது திங்கட்கிழமை! பிடித்து மீண்டும் பூட்டி விட்டனர், சனி அன்று! ஒரு கிழமை! அரசன் என்ற அந் தஸ்து அடியோடு அழிந்துவிட்டது. அரசன் கைதியானான். மக்கள் கூடுகின்றனர் தீர்ப்பளிக்க! அந்தத் தீர்ப்பு நிறைவேற் றப்படும் நாளிலும் ஊர்வலம் உண்டு! விதவிதமான ஊர் வலம், இந்த விந்தை வேந்தனுக்கு! “அரசர்கள் மடியவேண்டும் அல்லது பிரான்சு மக் கள் மாள வேண்டும். இரக்கம் காட்டுவது மிருகத்தனம்! பகைவர் அனைவரும் வாளுக்கு இரையாக வேண்டும்-சட்டம் சமைத்தளிக்கும் வாளுக்கு! ராபஸ்பயரி பேசிவிட்டான் - மன்னனுக்கு மரண தண் டனை தந்துவிட்டான். மன்றம் கூடி, அதே தீர்ப்பை எழுதப் போகிறது பிறகு.முன் கூட்டியே,ராபஸ்பயரி முழக்கமெழுப்பி விட்டான். அவன் பேச்சு, சட்டமாகும் காலம் அது. மன்னனை என்ன செய்வது? பிரச்சினை, பல விளைவு களை, மனக் குழப்பங்களை ஏற்படுத்தியபடி இருந்தது. 'மன் னித்து, மக்களின் பெருங்குணத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுவோம் என்று கூறினர் சிலர். 'முடிபறித்துக் கொண்டு. விரட்டிவிடுவோம். எங்கோ சென்று ஏதோ செய்து பிழைக் கட்டும்' என்றனர் ஒரு சிலர். 'மக்களே அதிகாரத்தின் பிறப் பிடம்; முதலிடம். மன்னன் அவர்களின் குறிப்பறிந்து நடந்து கொள்ளட்டும்' என்று பேசினர் மற்றும் சிலர். ராபஸ்பயரி நெளிவு ஏன் குழைவு ஏன், உள்ளதை உரைப்பேன் என்று கூறி, 'மன்னன் அல்லது மக்கள்!' என்றான். அந்த விநாடியே. பதினாறாம் லூயி இறந்துபட்டான் என்று பொருள். பிண மாக்கிப் புதைக்க வேண்டிய, சடங்கு மட்டும், பாக்கியாக