பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பானால்

73


இருக்கிறது. அது பிறகு, விரைவில். அதற்கு முன்பே பிரான்சு நாட்டின் ஆத்திரம், தீர்ப்பளித்துவிட்டது, ராபஸ்பயரியின்மூலமாக மன்னன் மடியவேண்டும் என்று!

     மன்னனிடம், பாபம், எது இருந்தது மடியாமல்! அரசு இழந்து, நிலைகுலைந்து, ஆதரவு மறைந்து ஆண்டியும்படாதபாடுபட்டு, அடைபட்டுக் கிடக்கிறான்; மன்னன் சிறையில்

இருக்கிறான்! ஒரு நாளைக்கு அவனைக் கொல்லப் போகிறோம்! என்று எவனெவனோ கூறுவதைக்கேட்டுக்கொண்டு!மடியாமலா இருக்கிறான் மன்னன்!

       மன்னன் பிழைத்துப் போகட்டும் என்று மனிதாபிமானத்துடன் பேசுபவர், நாட்டுக்குத் துரோகிகள் என்று ஏசப்படுகிறார்கள். பரிதாபமாக இருக்கிறது பார்க்க- என்று

கூறுவோர், மக்களின் பகைவர் ஆகிவிடுகின்றனர். மன்னனிடம் பரிவு காட்டியதால் கட்சிகளே கலைகின்றன; வீரர்களுக்குக் கோழைப் பட்டம் சூட்டப்படுகிறது; நாட்டுக் குழைத்தவர் விரட்டப்படுகிறார். அந்த நிலையில், மன்னன் மடிய வேண்டும் என்று ராபஸ்பயரி சொன்னான்! மடிந்துவிட்டான் மன்னன்— பழைய நினைவுகள் குடைவதால் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் மட்டுமேஇருக்கிறான்

    மன்னனைப் பாருங்கள், அவனிடம் சமரசம் பேசிவருகிறீர்களே, எவ்வளவு அறிவற்ற தன்மை! அரசன் எவ்வழியோ, அவ்வழியேதான், பிரபுக்கள் கூட்டம். அவர்கள்,

நம்மை என்றும் மன்னிக்கமாட்டார்கள்! நாம் செய்ததை மறக்கவும் மாட்டார்கள். அவர்கள் உள்ளவரை, புரட்சிக்குப் பகை வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அடைத்து வைத்துவிடலாம் என்கிறீர்களா! எவ்வளவு பேர்களை? எங்கே? அவர்களிடம் மயங்கித் துரோகம் செய்யாத காவலாளிகளை எங்கே கண்டுபிடித்து அமர்த்தப் போகிறீர்கள்? நான் கூறட்டுமா, பாதுகாப்பான சிறைச்சாலை! மக்களின் பகைவர்கள் அனைவரையும் அடைத்து வைக்கக் கூடிய, பெரிய பாதுகாப்பான சிறைச்சாலை, சொல்லட்டுமா! சுடு காடு. ஆம்! அதுதான் அவர்களுக்கு ஏற்ற சிறைச்சாலை! .