பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இதயம் அங்கு சென்றால்தான், தப்பிவந்து நமது உயிர் குடிக்காம லிருப்பார்கள். அவர்களை ஓடிவிடாமல் தடுக்கக் கூடிய ஒரே காவலாளி சாவு! கொல்ல வேண்டும்! கொல்ல வேண்டும்! அதுதான்" உண்மையில் பலனளிக்கும் கொள்கை. படை திரட்டு னர்; பயன் இல்லை! பகை அழியாது!! குத்தீட்டியுடன் இரு நூறு வீரழைத் தாருங்கள்; கொன்று குவிக்கிறேன், பகை வர்களை! புரட்சி வெற்றிபெறச் செய்கிறேன். மாராட் பேசுகிறான் அவ்வளவு இரத்தவெறியுடன் மறுப்பார் இல்லை! மறுக்கக்கூடிய சிலர் மாண்டனர்; பலர் தலைமறைவு ஆகிவிட்டனர். இப்போது குத்தீட்டி, கொடு வாள், வெட்டுப்பாறை - இவைதானிருக்கின்றன. கொலையைத் தொழிலாக்கிக் கொண்டவர்கள், குதூ கலப்படுகிறார்கள், தங்களுக்கு வேலை கிடைக்கப் போகிறது என்று அறிந்து; போர் முரசு ஒலிக்கக் கேட்டதும் பிணத்தைப் பிய்த்துத்தின்னலாம் என்று பெருங்கழுகுகள் வட்டமிடுமாம்! வெட்டிக் குவிப்போம் என்று மாராட் பேசிவிட்டது கேட்டுச் சொல்லக் கூசாத கொடுமை செய்வதைத் தொழிலாகக் கொண்ட கும்பல் குதூகலப்பட்டது. 'இது அல்லவா அரசு! நமது அருமை அறிந்த அரசு' என்று. நாட்டை ஆபத்து சூழ்ந்து கொள்ளும்போது ஆர அமர யோசித்துக்கொண்டு, அறிவுரைகள் பேசிக்கொண்டு, அருளா ளர் கூறுவதைக் கேட்டுக் கொண்டு, காலங்கடத்த முடியுமா என்று எக்காளமிட்டனர். இதயத்தை இரும்பாக்கிக் கொண்டவர்கள். அதற்கு ஏற்றாப்போல வெளி நாட்டவர், வேகமாகப் பிரான்சைத் தாக்கிடத் தொடங்கினர். கடும் போர் மூண்டு விட்டது. மன்னர் பலர் கூடினர், பிரான்சு நாட்டைத் தாக் கிட-புரட்சியைப் பொசுக்கிட-மன்னனை மீட்க. அடைபட்டுக் கிடக்கும் போதே, அவனால் வந்திடும் ஆபத்தைப் பார்த்தீர்களா? ஆதிக்க வெறி பிடித்தலையும் இனம், அவனுக்காகக் கிளம்புகிறது காணீர்! இனியுமா உங்கட்குத் தயக்கம்? மன்னன் அல்லது மக்கள்!' என்று பேசி னர் மாராட்டுகள், ராபஸ் பயரிகள்! .