பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 இரும்பானால் மக்களின் உரிமைகளைக் காக்கவும், மக்களிடையே ஒருவனோ, ஒரு கூட்டமோ கிளம்பி பொது உரிமையை, நலனை அழித்திடாதபடி பாதுகாக்கவுமான ‘புனித'க் காமி யத்துக்காகவே மன்னன் இருக்கிறான். அந்தக் கடமையை மறந்து அரசபீடம் கிடைத்தது தனக்காக சுகபோகத்துக் காக என்று எண்ணிடும் கணமே புனிதம் போய் விடுகிறது; மன்னள் மக்களின் பகைவனாகி விடுகிறான். பகைவரை வீழ்த்த வேண்டியவனே பகைவனாகிவிட்டால், அவனை ஒழிப்பதுதான் முறை. ஒழித்தாகவேண்டும் என்றெல்லாம் 'தத்துவம்' பேசியும், செயலில் காட்டியும் வந்த இங்கிலாந் திலேயே, செல்வாக்குள்ள ஒரு கூட்டம் கிளம்பி, 'பிரான்சு நாட்டிலே நடப்பது அரசியல் மாறுதல் அல்ல, பயங்கரமான படுகொல, குத்திக் குடலறுப்போன், வெட்டி வீழ்த்துவோன், பச்சிளங் குழந்தைகளைக்கூடக் கழுத்தைத் திருகிக் கொன்றிட அஞ்சாத பாவிகள் கூடிக் கொண்டு படுகொலை செய்து கொண்டு வருகிறார்கள். அங்கு எல்லாம் அழிந்து படுகிறது. அறம் அழிகிறது! அன்பு அழிகிறது! பண்பு அடியோடு அழிந்து விட்டது! பக்தி பூண்டோடு களைந்தெறியப்படுகிறது. இதை அனுமதிப்பது கூடாது.இதனால் பிரான்சு மட்டுமல்ல, உலகே கெடும்; மனிதகுலமே நாசமாகும். கற்றறிந்த வித்தகரும், காலத்தை வென்ற பேரறிவாளரும், நமக்களித்த, போற்றற் கரிய பொன்னான கருத்துக்களும், முறைகளும் பாழாக்கப் படுகின்றன. அவை பாருக்கு உள்ள பொதுச் சொத்து. மனி தரை மிருகத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஆன்றோரும் சான்றோரும்,அருளாளரும், நமக்களித்த நெறி; அது பாழாக்கப்படுகிறது. ஆறமறிந்தோரே! ஆண்டவனை மறவாதோரே!பண்பினை இழக்காதிருப்போரே!பாபத்தைக் கண்டு அஞ்சிடும் நல்லோரே! பிரான்சிலே தலை தூக்கி ஆடும் 'பாபத்தை' ஒழித்துக் கட்டிட முனைவீர், முன் வருவீர்! ஆபத்தில் சிக்கி இருப்பது அரசப் பதவி அல்ல; அறம்! அறம் தாக்கப்படுகிறது! அறம் அழைக்கிறது, அன்பர்களை! அஞ்சா நெஞ்சுடையோரை! அறத்தின் குரலைக் கேளீர்! அதனைக் காத்திட வாரீர்’--என்றெல்லாம் பேசியும் எழுதியும் வந் தது.