பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இதயம் பல்வேறு நாடுகளிலேயும், பகைக்கும் கும்பால், பாயத் தயாராக இருந்தன. யாரேனும், 'துணிந்த பேர்வழி' ஒருவன், முனைத்திருந் தால், பிரான்சிலே முளைத்த புரட்சியை அழித்திட, பண மும் படையும் ஏராளம் திரட்டிவிட முடியும். அத்தகைய சூழ்நிலை,லூயி மன்னன் முயற்சி ஏதும் முறைப்படி செய்யாமலேயே, உருவாகிக் கொண்டு வந்தது. இனி இங்கு இருந்தால் சுட்டுச் சாம்பலாக்குவர் என்ற அச்சம் கொண்ட, பிரபுக்களில் சிலர், பிரான்சிலிருந்து தப்பித்துக் கொண்டு, இங்கிலாந்து முதலிய நாடுகளுக்கு ஓடி விட்டனர். அங்கு அவர்கள், கதை கதை'யாகக் கூறினர், பிரான்சிலே நடக்கும் பயங்கரம் பற்றி. "வெறி பிடித்த மக்கள் இரத்தத்தைத்தான் குடிக்கி றார்கள், மனித இரத்தத்தை" என்பான் ஒரு பிரபு. அவன் மனைவி, குழந்தையின் இரத்தத்தை!’ என்று கூறி அழுவாள். கேட்போர் துடிப்பர். துணிவுள்ளோம், என்ன நேரிடினும் சரி; இந்தப் புரட்சியை எதிர்த்தாக வேண்டும்' என்று பேசுவர். அமெரிக்க சுதந்திரத்தை ஆதரித்து 'நேர்மையாளன்- பாங்காளன்', என்று பெயரெடுத்த பர்க் எனும் ஆங்கில அறிஞனே, பிரான்சிலே நடக்கும் புரட்சி மனித குலத்துக்கு மாபெரும் நாசம் விளைவிப்பதாகும் என்று எழுதினான். டாம்பெயின் போன்ற உரிமை உணர்ச்சியை மதித்திடும் ஒரு சிலர் மட்டும். தடுத்து நிறுத்தி இராவிட்டால், புரட்சிக்கு எதிர்ப்பு, வேகமாகவும் வலிவுள்ளதாகவும் உருவாகிவிட் டிருந்திருக்கும். "தக்க சமயம் இது! தலைவெட்டத்தானே தெரியும் இதுகளுக்கு! படை எடுத்துச் சென்றால், தடுத்திடும் ஆற்றல் ஏது? முறை என்ன தெரியும்! கூனும் குருடும்,மொண்டியும் நொண்டியும் கூடிக்கொண்டு கொக்கரிக்கின்றன! வீரமும் போர் முறையும் கருவியும் நிரம்ப நம்மிடம் இருக்கின்றன.