பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பானால் நாம் படை எடுத்துச் சென்றால், பயந்தோடிப் போவர். பத்து நொண்டிகள் கூடி எதிர்த்தாலும், ஒரு வீரனிடம், என்ன நடக்கும்? பார்ப்போம்! என்று எண்ணினர். 77 படை திரட்டினர், பாய்ந்தனர் அன்னியப் படைகளைத் தாக்க; பாயுமுன், உள்நாட்டிலே துரோகிகளையும், சதிகா ரர்களையும், அரசனிடம் கைக்கூலி பெற்று மக்களைக் காட் டிக் கொடுக்கக் கூசாத கயவர்களையும் விட்டு விட்டா நாம் களம் செல்வது! நாம் அங்கு இருக்கும்போது இந்தக் கும்பல் பின்புறமிருந்து தாக்கினால் நமது கதி என்ன ஆகும்? என்று கேட்டனர் சிலர்." 'ஆமாம்! முக்கியமான பிரச்சினை" என்ற னர் பலர். 'இதிலென்ன சிக்கல்! சீவுங்கள் தலைகளை!' என்றனர் மாராட்டுகள். கொன்றனர், கொன்றனர்! எங்கும் குருதி! அதைக் கண்ட பிறகே, மனதுக்கு ஒரு நிம்மதி ஏற்பட் L. து ; களம் சென்றனர். களத்திலே கடும்போர்! அங்கு தோற்றால், எல்லாம் அழிந்துவிடும் என்ற எண்ணம் அவர்களைப் புலியாக்கி விட்டது. வெற்றி பல பெற்றனர். அடியோடு எதிரிகள் அழிக்கப்படவில்லை என்றாலும், பலம் முறியடிக்கப்பட்டு விட்டது. வெளிப்பகை ஒருவிதமாக அடக்கப்பட்டு விட்டது. இனி மன்னனைக் கவனிப்போம் என்று கூறினர். மீண்டும் விவாதம்! குற்றத்தை விசாரிக்கலாம்; தீர்ப்பளிக்கும்படி மக்களைக் கேட்கலாம்." - என்று சிலர் வாதாடினர். 'சிறை யில் இருந்தாலும், மன்னன் எவ்வளவு பேர்களைத் தன் வலை யில் விழச் செய்கிறான் பார்த்தீர்களா!' என்றனர், அரச பரம்பரை பூண்டோடு அழிக்கப்படவேண்டும் என்ற கொள்கை கொண்டோர். அரச குடும்பமோ, அரண்மனையில்கூ... அல்ல, வாட் டம் தரும் ஒரு கோட்டத்தில் அடைக்கப்பட்டு, வசதிகள் பலவும் குறைக்கப்பட்டுக் கிடந்தது. அரசி, பலகணிவழியாக எட்டிப் பார்ப்பாள். சிலவேளை களில் வெட்டப்பட்ட தலையை ஈட்டியில் செருகித் தூக்கிக் காட்டிக் கூச்சலிடுவான், புரட்சியில் ஈடுபட்டவன்.