பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இதயம் "இது நடக்கிறது வெளியே! உள்ளே இருக்கிறீர்கள் நீங்கள்.உம்! எத்தனை நாளைக்கு? என்று கேட்கிறது அவன் பார்வை. அரசியின் கண்களில் நீர் ததும்புகிறது. "அழுகிறாளப்பா அரசி! மக்களை அழ வைத்த அம்மணிக்கு இப்போது கண்ணீர் எப்படி இருக்கும் என்பது புரியுமல் லவா? என்கிறான் அவதி பல கண்டவன். மன்னன், மக்கள் மன்றத்திலே நிறுத்தப்பட்டான்; குற்றப்பத்திரிகை படித்தனர்.வாதாட யாராவது தேவையா என்று கேட்டனர்; 'ஆம்' என்றான் அரசன். இருவர்முன் வந்தனர், மன்னன் சார்பில் வாதாட; அவர்களைச் சுட்டுத் தள்ளுவதுபோலப் பார்த்தனர் மக்கள் மன்றத்தினர். இரக்கம் காட்டச் சொல்லித்தான் அவர்கள் கேட்டனர்! சட்டம் பேசவில்லை. கருணை காட்டும்படி கூறினர்; காவலன் மீது குற்றம் ஏதும் இல்லை என்று பேசவில்லை. மன்னனுக்காக வாதாடவில்லை; மனிதனுக்காக வாதாடினர்! மக்கள் மன் றம் ஏற்றுக் கொள்ளவில்லை; அவ்வளவு கல் நெஞ்சமா என்றே எவருக்கும் கேட்கத் தோன்றும்! ஆனால் ஆண்டு பல. பிரான்சு மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டபோது, சட்டம் பேசி அவர்களைச் சாகடித்தபோது, குற்றமற்றவர்களைக் கொன்றபோது, வழக்கறிஞர்களே கிடைக்கவில்லையே, . மக்களுக்காக வாதாட! ஒருவரிருவர் வாதாடியபோதும். சட்டத்தின் புனிதத் தன்மையும், மதத்தின் மாண்பும், மன்ன ராட்சியின் மேம்பாடும் நிலைத்திட வேண்டுமானால், கண் ணீர் கண்டு கடமையினின்றும் தவறக்கூடாது. இரக்கம் பேசிச் சட்டத்தைக் குலைக்கக் கூடாது. கர்த்தர் இருக்கிறார் இரட்சிக்க! சட்டம் இருக்கிறது தண்டிக்க!" என்று எத்தனை நீதிபதிகள் பேசினர்- பிறகு பிரபுக்கள் கெக்கலி செய் தனர். மன்னன் மக்களுக்கு எதிராகச் சதிபுரிந்தான் என்று குற்றம் சாட்டி, மரண தண்டனை விதிக்கப்பட்டது மக்கள் மன்றத்தால். 721 பேர் உறுப்பினர் இருந்தனர்! 361 பேர் மரணதண்டனை விதித்தனர். நிபந்தனையின்றி மரணதண் டனை. மேலும் சிலர், சில நிபந்தனையுடன், மரண தண்டனை தரலாம் என்றனர்.