பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பானால் மொத்தத்தில், மன்னனுக்கு மரணதண்டனை தர வேண்டும் என்று 387 உறுப்பினர்களும், மற்ற 334 உறுப்பி னர்கள் போர் முடியுமட்டும் சிறையில் வைத்திருந்து விட்டுப் பிறகு நாட்டைவிட்டு ஓட்டிவிடுவது என்றும் கூறினர். 79 மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு, மன்னனுக்கு அறிவிக்கப்பட்டது. பதறாமல் கேட்டுக் கொண்டு, சாக மூன்று நாள் அவகாசம் கேட்டான் மன்னன். . அவ்வளவு மனஉறுதி கொண்டவனா இந்த மன்னன்! சாகப்போகும் போதுதானா, இந்த நெஞ்சு உரம் வர வேண்டும்! ஆண்டுகொண்டிருந்தபோது, காட்டாத உறுதி இப்போது தெரிகிறதே!அணையுமுன் ஒளிவிடுமாமே விளக்கு. அதுபோலப்போலும் என்று கருதினர் மன்னனைக் காவல் காத்து நின்றவர்கள். மன்னனை. 1793 ஜனவரி 21-ம் நாள்! வெட்டுப் பாறைக்கு அழைத்துச் செல்கிறார்கள் அடைபட்டுக் எதிரே கிடந்த தோட்டத்திலிருந்து, அரண்மனைக்கு அமைக்கப்பட்ட 'கில்லட்டின்' எனும் வெட்டுப் பாறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். தளபதிகள் வந்திருக்கிறார்கள், பணிவு காட்ட அல்ல; யத்துக்கு ஏற்பாடு செய்ய! போர் வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள், மரியாதை காட்ட அல்ல: தப்பி ஓடிவிடாமல் பார்த்துக் கொள்ள. பாரிஸ் பட்டணத்திலே ஒரே அமைதி! தெருக்களிலே நடமாட்டம் இல்லை. போர் வீரர்கள் தவிர, மக்கள் இல்லை. பலகணிகள் திறக்கப்படவில்லை, கதவுகள் தாளிடப்பட்டுக் கிடந்தன. வெட்டுப்பாறை அருகே நின்று, போர்வீரர்கள் முரசு கொட்டியபடி இருந்தனர். இருள் சூழ்ந்து கொண்டி ருந்தது. மன்னன் அழைத்துச் செல்லப்பட்டான், புரட்சி அரசு அனுப்பி வைத்த வண்டியில். ஆடலையும் பாடலையும், அணிவகுப்புகளையும், வெற்றி ஊர்வலங்களையும், வெறியாட்டத்தையும் பலமுறை காட்டிய பாரிஸ் பட்டினம் அன்று ஒரு புதிய பயங்கரத்