பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயம் தோற்றத்தைக் காட்டி நின்றது. மன்னனைத் தூக்கிலிட மக்கள் கட்டளையிட்டுவிட்டார்கள். மக்கள் ஆணையை நிறை வேற்ற வீரர், அழைத்து வருகிறார்கள் மன்னனை. மன்னன் காணும் மூன்றாவது ஊர்வலம் - கடைசி ஊர்வலம்! வெட் டுப் பாறை! வண்டி நின்றது. மன்னன் அமைதி குலையா மல், 'சாக'த் தயாரானான். மக்களிடம் 'நான் குற்றமற்ற வன்' என்று கூறத் தொடங்கினான்! 'முரசுகள் ஆர்ப்பரிக் கட்டும்' என்று உத்தரவிட்டான் அதிகாரி. மன்னன் பேசியது நின்றது; வெட்டரிவாள் கழுத்தில் விழுந்தது. துண்டிக்கப் பட்ட தலையை ஒரு போர் வீரன் தூக்கிக் காட்டினான், அங்கு இருந்தோருக்கு. 'வாழ்க குடி அரசு!' என்று கூறினர்; மக்கள் கலைந்தனர்; மன்னன் கதை முடிந்தது. 80 "உன் பெயர். 'ஆஸ்ட்ரிய அரச குடும்பத்தைச் சார்ந்த மேரி அன் டான்னய்ட் என்று என்னை அழைப்பார்கள்.' நான், 'இப்போது உன் நிலைமை?" "முன்பு பிரான்சு மன்னராக இருந்த லூயியுடைய "வயது? "முப்பத்து ஏழு! 1793 அக்டோபர் திங்கள், பதினாவாம் நாள், மக்கள் மன்றம் அமைத்த வழக்கரங்கில் நடைபெறுகிறது இந்த உரையாடல். அரசியை மக்கள், ஊர் பெயர் கேட்கிறார் கள்; உற்ற வயது என்ன என்று கேட்கிறார்கள்; அருகே நெருங்கவே முடியாதே, அரசியை - சீமானாகவோ,சீமாட்டி யாகவோ இருந்தாலொழிய! சாமான்யர்கள் புரட்சி அரசு அமைத்தனர்; அவர்கள் கேட்கிறார்கள், குற்றவாளியைக் கேட்கும் முறைப்படி "உன் பெயர் என்ன?" என்று. குற்றங்களை மெய்ப்பிக்கச் சாட்சிகள் பேசினர்; அரசி யின் மறுப்புரை கேட்டனர்; கடைசியில் மரண தண்டனை தரப்பட்டது.